search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்கும் நீரால் நோய் பரவும் அபாயம்"

    • பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் ஆகியோர் அப்பகுதியை மூக்கை பிடித்தவாறு கடந்து செல்லும் அவல நிலையில் உள்ளனர்.
    • அலுவலகம் முன்பு நீர் தேங்கியுள்ளதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட கொலசனஹள்ளி ஊராட்சி மன்ற கட்டிடத்தின் முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மினி டேங்க் அமைத்துள்ளனர்.

    கடந்த ஓராண்டாக மினி டேங்கில் ஓட்டை விழுந்து பழுது ஏற்பட்டு நீர் கசிந்து அலுவலகம் முன்பு குட்டை போல் நீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் அங்கு தண்ணீர் பிடிக்க வரும் பொதுமக்கள், ஊராட்சி அலுவலகத்திற்கு பல்வேறு வேலைக்காக வரும் பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் ஆகியோர் அப்பகுதியை மூக்கை பிடித்தவாறு கடந்து செல்லும் அவல நிலையில் உள்ளனர்.

    மேலும் பல மாதங்களாக ஊராட்சி மன்ற கட்டிடம் அலுவலகம் முன்பு நீர் தேங்கியுள்ளதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு பழுதான டேங்கை புதிதாக மாற்றி அமைக்கவும், தேங்கியுள்ள நீரை அகற்றவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×