search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்காசியில் பிளாஸ்டிக் ஒழிப்பு"

    நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா மற்றும் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாகின் அபுபக்கர் ஆகியோரின் அறிவுரையின்படி தென்காசி பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    தென்காசி:

    குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் பராசக்தி வித்யாலயா பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பராசக்தி வித்யாலயா பள்ளியில் இருந்து தொடங்கி பூங்கா சாலை, பேருந்து நிலையம், குற்றாலநாதர் சாலை வழியாக கூட்டரங்கம் வந்தடைந்தது. பேரணியை செயல் அலுவலர் கனகராஜ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    மேலும் குற்றாலத்தில் உள்ள பண்பொழி திருமலைக்குமாரசுவாமி தேவஸ்தானம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி பள்ளியில் தொடங்கி ராமலயம் பகுதி முழுவதும் நடத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    பேரணியில் பேரூராட்சி சுகாதாரஆய்வாளர் ராஜகணபதி, பராசக்தி வித்யாலயா பள்ளியின் முதல்வர் வேலுச்சாமி, திருமலைக்குமாரசுவாமி தேவஸ்தானம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அமுதகலா, சுகாதார ஆய்வாளர் சுடலைமணி, பேரூராட்சி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தென்காசி, மேலகரம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியில் மேலகரம் பேரூராட்சி செயல் அலுவலர் லிங்கராஜ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சரவணன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன், உடற்கல்வி ஆசிரியர் துரை மற்றும் ஆசிரியைகள், சுகாதார ஆய்வாளர் சுடலைமணி, பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் தங்கராஜ் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பண்பொழி பேரூராட்சி யில் நடைபெற்ற பேரணியில் பண்பொழி ஜாய் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் இ.மசூது ராவுத்தர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல்அலுவலர் முரளி, பள்ளி தாளாளர் ,தலைமை ஆசிரியர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இலஞ்சி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை செயல் அலுவலர் லோபாமுத்திரை தலைமையில் இலஞ்சி ராமசாமிப்பிள்ளை மேல்நிலைப்பள்ளி மற்றும் வள்ளிநாயகா துவக்கப்பள்ளி மாணவ- மாணவிகள் மூலம் நடத்தப்பட்டது.

    சாம்பவர்வடகரை பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் நடத்தப்பட்டது. பேரணியில் செயல் அலுவலர் அபுல்கலாம் ஆசாத், அரசு மருத்துவர் கார்த்தி, சுகாதார ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மஸ்தூர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மணிமுத்தாறு பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ரிஹானா நர்சரி பள்ளி மாணவ -மாணவிகள் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியில் பேரூராட்சி தலைமை எழுத்தர் மாணிக்கராஜ், மணிமுத்தாறு இன்ஸ்பெக்டர், அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ரிஹானா பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் பேரூராட்சி அனைத்து பணியாளர்கள், சமுதாய பரப்புரையாளர்கள் மற்றும் சுயஉதவிகுழுக்கள் கலந்து கொண்டார்கள்.

    பெருங்குளம் பேரூராட்சியில் செயல் அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி தக்கர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆனி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை டெய்சி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    பேரணியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெருங்குளம் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    சாயர்புரம் பேரூராட்சி பகுதியில் செயல் அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி தூயமேரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்லின் சவுந்தரா முன்னிலையில் நடந்தது. தொடர்ந்து மாலையில் நடுவைக்குறிச்சி ஆர்.சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சகாயமேரி முன்னிலையிலும் நடைபெற்றது. பேரணியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், சுகாதார ஆய்வாளர் வேல்மயில் மற்றும் சாயர்புரம் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×