search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்த்த"

    • பகவதி அம்மன் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது
    • போர்க்கால அடிப்படையில் தண்ணீர் வெளியேற்றம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு வேளைகளில் தொடர்ந்து இடையிடையே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் வானம் மழை மேகத்துடன் மப்பும் மந்தாரமாக காட்சியளித்தது. பின்னர் மதியம் 12.30 மணியில் இருந்து "திடீர்"என்று இடி-மின்ன லுடன் கனமழை பெய்ய தொடங்கியது.

    இந்த மழை பிற்பகல் 2.30 மணி வரை 2 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. அதன்பிறகு மாலை வரை விட்டு விட்டு சாரல் போன்று மழை பெய்து கொண்டே இருந்தது. இடையிடையே பயங்கர இடி முழக்கமும், கண்ணை பறிக்கும் வகையில் "பளிச், பளிச்"என்று மின்னலும் ஏற்பட்டது. இந்த கனமழையினால் தெருக்களில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால் மழை வெள்ளம் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்குள் புகுந்தது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதைத்தொடர்ந்து கோவில் மேலாளர் ஆனந்த் மேற்கொண்ட அதிரடி நட வடிக்கையின் காரணமாக திருக்கோவில் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் கோவிலுக்குள் தேங்கி நின்ற மழையின் நீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணி நேரத் துக்குள் அந்த மழை வெள்ளம் முழுமையாக வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு மாலை 4 மணிக்கு வழக்கம்போல் கோவில் நடை பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்து விட்டு வந்தனர். தொடர்ந்து பெய்த இந்த கனமழையினால் கன்னியா குமரிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க முடியாமல் லாட்ஜில் உள்ள அறைகளி லேயே முடங்கி கிடந்தனர். இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது.

    • திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டனர்
    • இரவு 10 மணி வரை மழை பெய்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழு வதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் இடைவிடாது 5 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. நாகர்கோவிலில் மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை முதலில் லேசாக தூரத்தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதி கரித்தது. பின்னர் இடை விடாது மழை கொட்டிக் கொண்டே இருந்தது. இரவு 10 மணி வரை மழை பெய்தது. இதனால் சாலை களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோட்டார் சாலை, மீனாட்சி புரம் சாலை, அவ்வை சண்முகம் சாலை, கேப் ரோடு மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    இன்று காலையிலும் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட் டது. அவ்வப் போது மழை பெய்தது. கொட்டாரம், மயிலாடி, தக்கலை, இரணியல், ஆரல்வாய் மொழி, கோழிப்போர்விளை, குருந்தன்கோடு, மாம் பழத்துறையாறு பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது. மாம்பழத்துறையாறில் அதிகபட்சமாக 40.4 மில்லி மீட்டர் மழை பதிவா கியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் அங்கு ரம்மிய மான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரு கிறது.

    கடந்த 2 நாட்களாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தடை நீக்கப்பட்டுள்ளது. அருவி யில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். அணையின் நீர்பிடிப்பு பகுதி களிலும், மலையோர பகுதிகளி லும் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதி கரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1¼ அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 1½ அடியும், மாம்பழத்து றையாறு அணை நீர்மட்டம் 6 அடியும், முக்கடல் அணை நீர்மட்டம் 2¾ அடியும் உயர்ந்துள்ளது. பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 32.03 அடியாக இருந்தது. அணைக்கு 1747 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யிலிருந்து 278 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 59.30 அடியாக உள்ளது. அணைக்கு 1167 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 80 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 14.40 அடியாக உள் ளது. அணைக்கு 270 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. சிற்றாறு-2 அணை யின் நீர்மட்டம் 14.49 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 9.20 அடியாகவும், மாம் பழத்துறை யாறு அணை யின் நீர்மட்டம் 30.18 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்கள் கிடுகிடு வென உயர்ந்து வருகிறது. இன்று அணை யின் நீர்மட்டம் 12.70 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 5.8, பெருஞ்சாணி 17.2, சிற்றாறு 1-4, சிற்றாறு 2-6.2, பூதப்பாண்டி 35.2, களியல் 9.4, கன்னிமார் 13.2, கொட்டாரம் 36.4, குழித்துறை 13.4, மயிலாடி 40.4, நாகர்கோவில் 21.2, புத்தன் அணை 16.6, சுருளோடு 6.2, தக்கலை 23, குளச்சல் 16.4, இரணியல் 12, பாலமோர் 13.2, மாம்பழத்துறையாறு 48, திற்பரப்பு 8.4, ஆரல் வாய்மொழி 7.2, கோழிப்போர்விளை 32.5, அடையாமடை 17.2, குருந்தன் கோடு 38, முள்ளங் கினாவிளை 7.4, ஆணைக் கிடங்கு 45.2, முக்கடல் 12.2.

    • சேலம் மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • ஏற்காட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் நேற்று கனமழை கொட்டியது. ஏற்காட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் ஏற்காட்டில் பனிமூட்டம் நிலவியதால் சுற்றுலா வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி ஊர்ந்து சென்றன. இதனால் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 30.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆணை மடுவு 11 மில்லி மீட்டர் , கரிய கோவில் 7 என மாவட்டம் முழுவதும் 48.40 பெய்துள்ளது.

    ×