search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீப்பிடித்த கார்"

    • எதிர்பாராத விதமாக காரில் இருந்து புகை கிளம்பி உள்ளது.
    • தொடர்ந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி அடுத்த செட்டிக்கரை அருகேயுள்ள சத்யா நகர் பகுதியில் ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான காரை, உறவுக்கார இளைஞர்கள் சிலர் நேற்று மாலை மைதானத்திற்கு எடுத்துச் சென்று கார் ஓட்டி பழகும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்பகுதியில் இருந்த சிலர் கார் பயிற்சியில் ஈடுபட்டவர்களை இப்பகுதியில் அச்சுறுத்தும் வகையில் காரை ஓட்டக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

    அப்போது காரை நிறுத்திவிட்டு, காரில் இருந்து இறங்கி தூரமாக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காரில் இருந்து புகை கிளம்பி உள்ளது.

    இதனைக் கண்டு காரில் வந்தவர்கள் பார்த்துள்ளனர். அப்போது காரில் தீ பற்றி எரிந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் உடனடியாக தருமபுரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    தொடர்ந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுமையாக எரிந்து சேதமானது.

    இந்த சம்பவம் குறித்து தருமபுரி நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது
    • ஒட்டன்சத்திரம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த காரால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததை அடுத்து அவ்வழியே சென்ற உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அவர்களை மற்றொரு காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 44). இவர் மதுரையில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்வதற்காக திருப்பூரில் இருந்து மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

    காரை ஜெகநாதன்(23) என்பவர் ஓட்டிச்செல்ல, வேல்முருகன் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் கள்ளிமந்தயம் அடுத்துள்ள செங்காட்டான் வலசு பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனே இருவரும் காரில் இருந்து இறங்கி தப்பினர். இதில் கார் முற்றிலும் தீப்பிடித்து சேதமடைந்தது.

    ஒட்டன்சத்திரம் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். அப்போது அவ்வழியே வந்த உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி காரில் வந்தவர்களின் விபரம் கேட்டறிந்து உடனடியாக மற்றொரு காரை வரவழைத்து அவர்களை மதுரைக்கு அனுப்பி வைத்தார்.


    ×