search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ விபத்து பலி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பலர் தீ மற்றும் புகை மூட்டதில் சிக்கி கொண்டனர்.
    • மின்சார மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

    சீனாவின் கிழக்கில் நான்ஜிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

    வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். ஆனால் பலர் தீ மற்றும் புகை மூட்டத்தில் சிக்கி கொண்டனர்.

    இந்த தீ விபத்தில் 15 பேர் பலியானார்கள். 44 பேர் காயமடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

    முதற்கட்ட விசாரணையில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது என தெரிய வந்தது.

    • பயிற்சி தளத்துக்கு அடுத்துள்ள சுரங்கத்தில் திடீரென தீப்பிடித்தது.
    • ராணுவ முகாம் மற்றும் அங்கிருந்த வாகனங்கள் போன்றவை கொழுந்துவிட்டு எரிந்தன.

    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்காவின் வடக்கு கேப் மாகாணத்தில் ராணுவ பயிற்சி தளம் செயல்படுகிறது. இங்கு ராணுவ வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பயிற்சி தளத்துக்கு அடுத்துள்ள சுரங்கத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென ராணுவ பயிற்சி தளத்துக்கும் பரவியது.

    இதில் ராணுவ முகாம் மற்றும் அங்கிருந்த வாகனங்கள் போன்றவை கொழுந்துவிட்டு எரிந்தன. தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் இந்த தீ அணைக்கப்பட்டது. எனினும் 6 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அந்த நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்தனர்.

    • தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது.
    • தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் ஜான்வி மாவட்டம் சிப்ரிபஜார் பகுதியில் 3 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூம் மற்றும் பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது.

    நேற்று இரவு இங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது. இது பற்றி அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.சுமார் 10 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கட்டிடத்தில் சிக்கி கொண்ட இன்சூரன்சு நிறுவனத்தை சேர்ந்த உதவி பெண் மேலாளர் உள்பட 4 பேர் தீயில் கருகி உயிர் இழந்தனர். 3 மாடி கட்டிடமும் தீயில் கடுமையான சேதம் அடைந்தது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • மின்சார சுவிட்ச் பாக்ஸ் அனைத்தும் எரிந்து வீடு முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டது.
    • புகைமூட்டத்தில் சிக்கிய பாலையா சம்பவ இடத்திலேயே இறந்து இருப்பது தெரிந்தது. அவரது உடலை மீட்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பன்னூர் தோமையர் தெருவை சேர்ந்தவர் பாலையா (வயது80). தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டில் மின் கசிவால் தீப்பிடித்தது. இதின் மின்சார சுவிட்ச் பாக்ஸ் அனைத்தும் எரிந்து வீடு முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதில் சிக்கிய பாலையாவால் வீட்டில் இருந்து வெளியே வரமுடியவில்லை. அவர் மூச்சுத் திணறி மயக்கம் அடைந்து விழுந்தார்.

    இதற்கிடையே பாலையாவின் வீட்டில் இருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பேரம்பாக்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது புகைமூட்டத்தில் சிக்கிய பாலையா சம்பவ இடத்திலேயே இறந்து இருப்பது தெரிந்தது. அவரது உடலை மீட்டனர்.

    மப்பேடு போலீசார் பாலையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் புகை மூட்டத்தில் சிக்கி முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தீ விபத்து ஏற்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஊசூராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள வீட்டில் குடிசைத் தொழிலாக தீப்பெட்டிகள் செய்து வருகிறார்.

    இன்று காலை 8 மணி அளவில் முருகையன் மற்றும் அவரது தங்கை சுகுணா (56) ஆகியோர் மருந்துகள் பொருத்திய தீக்குச்சிகளை, சாக்கு பைகளில் கொட்டினர். அப்போது தீக்குச்சிகள் ஒன்றோடு ஒன்று உரசி திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகையன் மற்றும் சுகுணா ஆகியோர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் வீடு முழுவதும் தீ பரவியதால், 2 பேர் மீது தீப்பற்றி எரிந்தது.

    இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். விபத்தில் சிக்கிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகுணா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீ விபத்து ஏற்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கச்சா எண்ணெய் குழாயில் இருந்து சிலர் சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் திருட முயற்சித்துள்ளனர்.
    • எதிர்பாராத விதமாக கச்சா எண்ணெய் குழாயில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    அபுஜா:

    நைஜீரியா நாட்டில் கச்சா எண்ணெய் திருட்டு சம்பவங்கள் பெருமளவில் நடைபெற்று வருகிறது. கச்சா எண்ணெய் விநியோகிக்கும் குழாய்களில் இருந்து சட்ட விரோதமாக கச்சா எண்ணெய் திருடி அதை வெளிச்சந்தையில் விற்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

    இந்நிலையில் அந்நாட்டின் நைஜர் டெல்டா மாகாணம் மைஹா நகரில் செல்லும் கச்சா எண்ணெய் குழாயில் இருந்து சிலர் சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் திருட முயற்சித்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக கச்சா எண்ணெய் குழாயில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் கச்சா எண்ணெய் குழாயில் பயங்கரமாக தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×