search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ அணைக்கும் பணி"

    • நாகர்கோவில் பீச் ரோட்டில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது.
    • இன்னும் 2 நாட்களுக்குள் தீ முழுமையாக அணைக்கப்படும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோட்டில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது.

    காற்றின் வேகம் அதிகமாக இருந்ததையடுத்து தீ மளமளவென பரவியது. இதையடுத்து குப்பை கிடங்கு முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் தீயை கட்டுப்ப டுத்த முடியவில்லை. இதையடுத்து கன்னியாகுமரி, திங்கள்நகர் தீயணைப்பு நிலைய த்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 50-க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினார்கள்.

    நேற்று இரண்டாவது நாளாகவும் தீயை அணைக்கும் பணி நடந்தது. குப்பை கிடங்கில் எரிந்த தீ கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் தொடர்ந்து குப்பை கிடங்கில் இருந்து புகை மண்டலங்கள் வந்துகொண்டே இருந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் குப்பைகளை கிளறி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இன்று 3-வது நாளாக தீயை அணைக்கும் பணியில் கன்னியாகுமரி, திங்கள்நகர், நாகர்கோவில் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து புைக மண்டலங்கள் வந்து கொண்டே இருப்பதால் அந்த பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து தீயணைப்பு அதிகாரிகள் கூறுகையில், குப்பை கிடங்கில் எரிந்த தீ கட்டுப்படுத்தப்பட்டுள் ளது. இன்று காலையில் மழையும் பெய்துள்ளது. இருப்பினும் குப்பை கிடங்கில் இருந்து புகை மண்டலங்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஜே.சி.பி. மூலம் குப்பைகள் கிளறப்பட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து புகையை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

    ஆனால் தொடர்ந்து புகை மண்டலம் வந்து கொண்டே இருக்கிறது. இன்னும் 2 நாட்களுக்குள் தீ முழுமையாக அணைக்கப் படும் என்றார்.

    ×