search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணாமலை கிரிவல பாதை"

    • சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்
    • 1,600-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகரம்மற்றும் கிரிவலப்பாதையில் தேங்கிய குப்பை மற்றும் உணவு கழிவுகளை தூய்மைப் பணியாளர்கள் அகற்றினர்.

    திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கடந்த 5-ந் தேதி நடைபெற்றது.

    இதையொட்டி மூலவர், அம்மன் மற்றும் சித்திர குப்தன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் சித்ரா பவுர்ணமிக்கு வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானத்தின் கழிவுகள் மற்றும் குப்பை அகற்றும் பணியில் சுமார் 1,600-க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் முழுவீச்சில்

    ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில்

    உள்ள குப்பை மற்றும் உணவு கழிவுகளை துரிதமாக அகற்றியதால், சாலைகள் தூய்மையாக இருந்தன.

    தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில்,

    அண்ணாமலையார் கோவிலில்சிறப்பு சாமி தரிசனம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து, அவர்களுக்கு கோவில் பிரசாதம் வழங்க வேண்டும் என அனைத்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×