search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் செஸ்ட் ஆஸ்பத்திரி"

    • செஸ்ட் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனரும், ஆஸ்துமா, அலர்ஜி, டி.பி., நுரையீரல் சிறப்பு மருத்துவருமான டாக்டர் கே.பொம்முசாமி தொடங்கி வைத்தார்.
    • 15 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் செஸ்ட் ஆஸ்பத்திரி மற்றும் திருப்பூர் மைக்ரோ லேப் சார்பில் இலவச நுரையீரல் ஆலோசனை மற்றும் பொது மருத்துவ முகாம் சிறுபூலுவப்பட்டி பிரிவில் உள்ள திருப்பூர் மைக்ரோ லேப் வளாகத்தில் நடைபெற்றது. முகாமை திருப்பூர் செஸ்ட்ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனரும், ஆஸ்துமா, அலர்ஜி, டி.பி., நுரையீரல் சிறப்பு மருத்துவருமான டாக்டர் கே.பொம்முசாமி தொடங்கி வைத்தார். டாக்டர் கபித் கான் நோயாளிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு, ஆலோசனைகளை வழங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் 15 பேர் மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.

    முகாமில் நுரையீரல் செயல்திறன் அறியும் பரிசோதனை, காசநோய்க்கான சளி பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை ஆகியவை இலவசமாகவும், மற்ற ரத்த பரிசோதனைகள் 50 சதவீத சலுகை கட்டணத்திலும், முழு உடல் பரிசோதனைகள் சிறப்பு சலுகை கட்டணத்திலும் மேற்கொள்ளப்பட்டது.

    ×