search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருட"

    • சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபாடி பகுதியில் நேற்று இரவு 2 பேர் மோட்டார்சைக்கிளில் சுற்றி திரிந்தனர்.
    • அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஆடு திருட வந்ததாக கூறினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபாடி பகுதியில் நேற்று இரவு 2 பேர் மோட்டார்சைக்கிளில் சுற்றி திரிந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஆடு திருட வந்ததாக கூறினர். இதையடுத்து அவர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஆட்டையாம்பட்டி போலீசார் 2 பேரையும் மீட்டு விசாரணை நடத்தினர். அதில் வலசையூர் பகுதியை சேர்ந்த ஹரிஷ் (24), அம்மாப்பேட்டையை சேர்ந்த காஜாமைதீன் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆடு திருட வந்த வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பரமத்திவேலூர் போலீஸ் நிலையம் எதிரே செல்போன் கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு கடையின் உரிமையாளர் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது.
    • இதையடுத்தில் கடையில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை பார்த்தபோது, நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம நபர் ஒருவர், கடையின் பூட்டை உடைக்க முயற்சித்தது தெரியவந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் போலீஸ் நிலையம் எதிரே செல்போன் கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு கடையின் உரிமையாளர் பிலால் (வயது 35) வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்தில் கடையில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை பார்த்தபோது, நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம நபர் ஒருவர், கடையின் பூட்டை உடைக்க முயற்சித்தது தெரியவந்தது. மேலும் கடையின் முன்புறம் அலமாரியில் வைத்திருந்த செல்போன் கவர்கள் திருடி பாக்கெட்டில் வைத்ததும் வீடியோவில் பதிவாகி இருந்தது.

    இது குறித்து பரமத்தி வேலூர் போலீசில் கடையின் உரிமையாளர் பிலால் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், கடையில் திருட முயற்சி செய்தது வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தினேஷ்(வயது30) தனியார் பேக்கரியில் கேசியராக பணிபுரிந்து வருகிறார்.
    • நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இருவர் திருட முயன்றனர். இதனைக் கண்ட தினேஷ், கூச்சலிட்டார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(வயது30). இவர் அங்குள்ள தனியார் பேக்கரியில் கேசியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இருவர் திருட முயன்றனர்.

    இதனைக் கண்ட தினேஷ், கூச்சலிட்டார். உடனே அப்பகுதி மக்கள் திரண்டு வந்து 2 பேரையும் கையும், களவுமாக பிடித்தனர். இருவரையும் வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தினேஷ் இது குறித்து புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்கள் வாழப்பாடியை அடுத்த செக்கடிப்பட்டியைச் சேர்ந்த கண்ணதாசன் (28). பாலமணிகண்டன், (20). என்பதும், இருவரும் லாரி டிரைவர்கள் என்றும் தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    சேலம் அருகே ஏ.டி.எம்-ல் பணம் திருட முயன்றனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் இருந்து சென்னை நோக்கி செல்லும் சாலையில் பொதுத்துறை வங்கிக்கு சொந்தமான இடம் உள்ளது.

    இங்குள்ள ஏ.டி.எம்.-ல் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கேமராவை சேதப்படுத்தினர். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணத்தை திருட முயன்றனர்.

    ஆனால் பணத்தை திருட முடியாததால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதனை அறிந்த வங்கி அதிகாரிகள் அன்னதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    ×