search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சுழி"

    • திருச்சுழி அருகே 12 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக மில் தொழிலாளிகள் கைதானார்.
    • காவல் நிலை யத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தனியார் மில் குடியிருப்பு பகுதியில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் விற் பனை செய்யப்பட்டு வருவ தாக திருச்சுழி காவல் நிலை யத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதனையடுத்து திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையி லான தனிப்படை போலீசார் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சுழியை அடுத்துள்ள தனியார் மில் குடியிருப்பு பகுதியில் சந்வதேகத்திற் கிடமாக சுற்றிதிரிந்த 2 நபர்களையும் போலீசார் பிடித்து விசாரணை மேற் கொண்டனர்.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் போலீசார் 2 நபர்களிடமும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் சுமார் 12 கிலோ புகையிலை பொருட் கள் இருந்தது தெரியவந்தது.சட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து அவ்வப் போது பொது வெளியில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

    இதையடுத்து புகையிலை பதுக்கி விற்றதாக மில் தொழிலாளிகள் மேலகண்ட மங்கலம் மில் குடியிருப்பு பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் ராஜ் (வயது 37). வெள்ளையாபுரம் தெற்கு தெரு பகுதி யை சேர்ந்த ஆழ்வார் சாமி மகன் ஞானகுரு (34) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • திருச்சுழி அருகே குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி கிராம மக்கள் தவிக்கும் நிலை உள்ளது.
    • உடனடியாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் பள்ளிமடம் ஊராட்சியில் காரேந்தல், கொக்குளம், நாடாக்குளம், பள்ளிமடம் மற்றும் ஊரணிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிரா மங்கள் உள்ளது. பள்ளிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊரணிப்பட்டி பகுதியில் சுமார் 35 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கு பல மாதங்களாக குடிநீர், சாலைவசதி, உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வில்லை. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    கடந்த 2020-21-ம் ஆண்டு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஊரணிப்பட்டி கிராமத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் குழாய்களில் தாமிரபரணி குடிநீருக்கு பதிலாக உப்பு தண்ணீரே சப்ளை செய்யப்படுகிறது. அதையும் கூட ஊராட்சி நிர்வாகம் முறையாக வழங்குவது இல்லை.

    இதனால் அன்றாடம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு இடையே நாள்தோறும் குடம் ஒன்றுக்கு ரூ.12 வரை செலவழித்து 4 முதல் 8 குடங்கள் வரை தனியார் குடிநீர் வாகனங்களில் வாங்கி பயன்படுத்தி வருகிறது.

    குடியிருப்புகள் வழியே முறையான சாலை வசதி யில்லாத காரணத்தால் மழைக்காலங்களின் போது தெருக்கள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து தீவுகளில் வாழ்வதை போல உள்ளது. மேலும் தேங்கிய மழைநீரில் முழங்கால் வரை நனைந்த படி நடந்து செல்வதால் நோய்த்தொற்று ஏற்படுகிறது.

    இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும் திருச்சுழி யூனியன் அலுவலகத்திலும் பலமுறை புகாரளித்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் குடிநீருக்காக அமைக்கப்பட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதனால் வீணாகி வரும் சிறிதளவு தண்ணீரையே வெகு நேரம் காத்திருந்து குடங்களில் சேகரித்து குடிநீராக பயன்படுத்தி வருகிறோம்.

    ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திருச்சுழி அருகே 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி பசுமடத்தெருவை சேர்ந்தவர் சிவ நாராயணன். இவரது மகன் அருண்குமார் (வயது 24). இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் அடிக்கடி பெற்றோரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். சம்பவத்தன்று அருண்குமார் சிவனாராயணனின் பென்ஷன் பணத்தைக் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் சிவநாராயணன் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் விரக்தி அடைந்த அருண்குமார் உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உறவினர்கள் மீட்டு அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அருண்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது சகோதரர் பழனிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி அருகே நரிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 58). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. சமீப காலமாக இவர் உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சமுதாய கூடம் அருகே பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுப்பிரமணியனின் மகன் மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×