search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி மத்திய பஸ் நிலையம்"

    • திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.39 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது.
    • பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் ஒன்றை மற்றொன்று முந்தி செல்ல முயற்சிக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.39 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது. அதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மத்திய பஸ் நிலையம் என்று தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தில் அரசு டவுன் பஸ்கள் ஒரு பகுதியிலும், வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் மற்றொரு பகுதியிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதனை தவிர மினிபஸ்கள் பஸ் நிலையத்தின்முகப்பில் நிறுத்தப்படுகின்றன.

    இந்நிலையில் பேருந்துகளை இயக்கும் டிரைவர்கள் கட்டுப்பாடின்றி தங்களது விருப்பம் போல் அதிவேகத்தில் பஸ்சை ஓட்டி பஸ் நிலையத்திற்குள் நுழைகின்றனர். இதனால் பயணிகள் அதிர்ச்சியடைகின்றனர்.

    இது குறித்து பயணிகள் கூறுகையில்:- பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் ஒன்றை மற்றொன்று முந்தி செல்ல முயற்சிக்கிறது. அந்த நேரத்தில் நடந்து செல்லும் பயணிகள்ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு நடந்து செல்ல அச்சமாக உள்ளது. நிலையத்திற்குள் வரும் பஸ்கள் மெதுவாக பொறுமையாக வர அறிவுறுத்த வேண்டும். இப்படித்தான் வர வேண்டும். இப்படித்தான் செல்ல வேண்டும் என்று வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் . அப்படி இல்லாத பட்சத்தில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×