search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்குறள் புத்தகம்"

    • 2000-ம் ஆண்டு முதல் தமிழக அரசு பரிசுத்தொகையும், சான்றிதழ்களையும் வழங்கி வருகிறது.
    • உலகத்திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்படுகிறது .

    கள்ளக்குறிச்சிடு

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் இலவச திருக்குறள் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது:- திருக்குறளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, 1,330 திருக்குறளை மனப்பாடமாக கூறும் மாணவர்களுக்கு 2000-ம் ஆண்டு முதல் தமிழக அரசு பரிசுத்தொகையும், சான்றிதழ்களையும் வழங்கி வருகிறது. உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 5 ஆண்டுகளுக்கு 2,000 திருக்குறள் புத்தகங்களை விலையில்லாமல் வழங்க முன்வந்துள்ளது. அதன்படி,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிக ளுக்கு உலகத்திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்படுகிறது . இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கள்ளக்குறிச்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கள்ளக்குறிச்சி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சின்னசேலம்,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சின்னசே லம்,பெரிய சிறுவத்தூர் மேல்நிலைப்பள்ளி, பெரிய சிறுவத்தூர் மாதிரி பள்ளி, தாகம்தீர்த்தாபுரம் மேல்நிலைப்பள்ளி, நயினார்பாளையம் மேல்நிலைப்பள்ளி, அரங்கநாதபுரம் உயர்நிலை ப்பள்ளி, மூரார்பாது மகளிர் உயர்நிலை ப்பள்ளி, சேஷச முத்திரம் உயர்நிலைப்பள்ளி, சித்தால் அரசு மாதிரிப் பள்ளி, சித்தேரிப்பட்டு மேல்நிலைப்பள்ளி, அரசம்பட்டு மேல்நிலைப்ப ள்ளி, ஏமப்போர் உயர்நிலைப்பள்ளி எனமொத்தம் 15 அரசு பள்ளி மாணவர்களுக்கு 750 திருக்குறள் புத்தகம் ரூ.7 ஆயிரம் மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் வழங்கி னார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாரா யணன், முன்னாள் இணை இயக்குநர் (நலப்பணிகள்) உதயகுமார், பாரதியார் தமிழ்ச்சங்கம் தலைவர் தியாகதுருகம் துரைமுருகன், சின்னசேலம் திருக்குறள் பேரவை தலைவர்பாசுகரன் என்ற பூங்குன்றன், முன்னாள் துணை கலெக்டர் கிருட்டிணசாமி,மாவட்டத் தொடர்பாளர் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் புலவர் அய்யா மோகன்,அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • திருக்குறள் ஆன்மீகத்தை கற்பிக்கிறது என தமிழக கவர்னர் ஆர். என். ரவி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார்.
    • இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருக்குறள் புத்தகத்தை பதிவுதபாலில் அனுப்பி வைத்தனர்.

    உடுமலை :

    திருக்குறள் ஆன்மீகத்தை கற்பிக்கிறது என தமிழக கவர்னர் ஆர். என். ரவி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்துதிருக்குறள்குறித்துக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த தமிழக கவர்னருக்கு உடுமலை தபால் நிலையத்திலிருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருக்குறள் புத்தகத்தை பதிவுதபாலில் அனுப்பி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சங்க உடுமலை ஒன்றிய தலைவர் ஆ. ராமசாமி, செயலாளர் தமிழ் தென்றல், கமிட்டி உறுப்பினர்கள் உரல் பட்டி கருப்புசாமி ,வி கே புரம் லோக முருகன், ஜல்லிபட்டி அஜித், குடிமங்கலம் செயலாளர் ஓம் பிரகாஷ், தாலுகா செயலாளர் கனகராஜ் ,ரங்கநாதன், சிஐடியு. செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் பங்கேற்றனர் .பின்னர் நிர்வாகிகள் கூறுகையில், கவர்னர் திருக்குறளை சரியாக படிக்க வேண்டும் .சனாதனத்தை புகுத்த நினைக்க கூடாது. தமிழர் பண்பாட்டை கொச்சைப்படுத்தக் கூடாது. தமிழகத்தில் மதவெறிக்கு இடமில்லை. மனுதர்மத்தை முறியடிப்போம் மக்கள் ஒற்றுமை காத்திடுவோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் குறள்வழி நிற்போம் என கூறினர்.

    ×