search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரட்டு பால்"

    திரட்டு பால் என்பது பால்கோவா போலதான் இருக்கும். வீட்டிலேயே எளிய முறையில் திரட்டு பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    பால் - 4 கப்
    சர்க்கரை - கால் கப்,
    பாதாம் - சிறிதளவு,
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.



    செய்முறை :

    பாதாமை ஊறவைத்து தோல் நீக்கி மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கனமான அடிப்பாகம் கொண்ட பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் கிளறி விடவும். பால் நன்றாக கொதித்து திரண்டு வரும்போது ஏலக்காய்த்தூள் மற்றும் சர்க்கரை போட்டு நன்றாக கிளறவும்.

    பாலுடன் சர்க்கரை கலந்து கிளற கிளற உதிரி உதிரியாக கட்டியாக வரும். அந்த நேரம் அடுப்பை அணைத்து விட்டு நறுக்கிய பாதாமை சேர்த்து இறக்கி சூடாகவே சாப்பிடலாம்.

    சூப்பரான திரட்டு பால் ரெடி.

    குறிப்பு :

    திரட்டி பால் பாத்திரத்தில் கொதிக்க விடும்போது கிளறி கொண்டே இருப்பது நல்லது. இல்லையெனில் அடிபிடித்து கருகிய வாசனை வந்து விடும். சிலர் பாலை பாத்திரத்தில் காய்ச்ச விடும் முன்னரே 2 டீஸ்பூன் நெய் விட்டு பின் பாலை ஊற்றி காய்ச்சுவர். இதன் மூலம் பாத்திரத்தில் பால் ஒட்டாது கிளற வரும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×