search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக தலைவர் ஸ்டாலின்"

    திமுக தலைவர் ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும் என மதுரை ஆதீனம் கருத்து தெரிவித்துள்ளார். #MaduraiAdheenam
    மதுரை:

    திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேரும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், கட்சி தலைமை அவரை கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி நடத்தினார் மு.க.அழகிரி. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுபற்றி மதுரை ஆதீனம் கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.

    ரஜினியின் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ரஜினி அரசியலுக்கு முழுமையாக வரவில்லை என்றும் எம்.ஜி.ஆர் போன்று எல்லா நடிகர்களாலும் வரமுடியாது என்றும் கூறினார்.



    ‘சோபியா கைது செய்யப்பட்டிருக்க கூடாது, அவரை அழைத்து பேசியிருக்க வேண்டும். தமிழிசை சத்தம் போட்டது இயல்பு தான், அவர் அவரின் கடமையை செய்திருக்கிறார்’ என்றும் மதுரை ஆதீனம் தெரிவித்தார். #MaduraiAdheenam
    திமுகவில் சேர்த்துக்கொண்டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்று முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி கூறினார். #DMK #MKAlagiri #MKStalin
    மதுரை:

    முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி வருகிற 5-ந்தேதி சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக பல்வேறு மாவட்ட ஆதரவாளர்களுடன் அவர் தினந்தோறும் மதுரையில் உள்ள அவரது வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இன்று 7-வது நாளாக ஆலோசனைக்கூட்டம் நடந்தது. பின்னர் மு.க. அழகிரி, நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வில் எங்களை சேர்த்துக்கொண்டால் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம். தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்.



    அவ்வாறு சேர்த்துக் கொள்ளாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையையொட்டி பிறகு முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுவரை மு.க.அழகிரி தி.மு.க. தலைமைக்கு எதிராக கருத்துக்கள் கூறி வந்த நிலையில் இன்று மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக கூறி இருப்பது தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #DMK #MKAlagiri #MKStalin
    திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இன்று பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் சென்னையில் பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். #DMKThalaivarStalin #DMKGeneralCouncilMeet #MKStalin
    சென்னை:

    சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் முறைப்படி அறிவித்தார்.

    பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் தலைவராக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 1969-ம் ஆண்டு பதவியேற்றார். கடந்த 7-8-2018 அன்று அவரது உயிர் பிரியும் வரை அக்கட்சியின் தலைவராக நீடித்தார்.

    கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் தி.மு.க.வின் இரண்டாவது தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவராக தொண்டர்களிடையே இன்று முதன்முறையாக எழுச்சி உரையாற்றினார்.



    பின்னர், பிற்பகலில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு வந்த ஸ்டாலின் தந்தை பெரியாரின் சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அங்கிருந்து மெரினா கடற்கரைக்கு சென்ற அவர் முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி சமாதிகளில்  மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று சென்ற இடங்களில் எல்லாம் ஏராளமான கட்சி பிரமுகர்களும், தொண்டர்களும் உற்சாக மிகுதியால் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.  #DMKThalaivarStalin #DMKGeneralCouncilMeet #MKStalin
    ×