search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டுக்கல் வழியாக செல்லும் ரெயில்கள் ரத்து"

    • வெள்ளனூர் - புதுக்கோட்டை, திண்டுக்கல் - அம்பாத்துரை, ராஜபாளையம் - சங்கரன் கோவில் ரயில் நிலையங்கள் இடையே ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
    • திண்டுக்கல் வழியாக செல்லும் ெரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    வெள்ளனூர் - புதுக்கோட்டை, திண்டுக்கல் - அம்பாத்துரை, ராஜபாளையம் - சங்கரன் கோவில் ரயில் நிலையங்கள் இடையே பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகரெயில் பாதை பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

    இதன் காரணமாக திருச்சி - மானாமதுரை - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) 16ந் தேதி முதல் 31ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சிவகங்கை - மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

    திண்டுக்கல் - அம்பாத்துரை ெரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 16ந் தேதி முதல் 26ந் தேதி வரை கோயம்புத்தூர் - நாகர்கோயில் பகல் நேர விரைவு ரயில் (16322) செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும்.

    இதே காலத்தில் சென்னை - குருவாயூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும்.

    இதனால் இந்த 3 நாட்களுக்கும் குருவாயூர் விரைவு ரயிலுக்கு, வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06672) இணைப்பு ரயிலாக செயல்படாது. மேலும் 27, 28 மற்றும் 31ந் தேதி பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில்கள் (16731/16732) திண்டுக்கல் - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

    ராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை (06663), செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் 16ந் தேதி முதல் 31ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.

    கொடைரோடு மற்றும் வாடிப்பட்டி ரயில் நிலையங்களிலும் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக 17ந் தேதி முதல் 22ந் தேதி வரையும் மற்றும் 26ந் தேதி முதல் 29ந் தேதி வரையும் மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் (16868) மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×