search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டுக்கல் ரெயில் நிலையம்"

    திண்டுக்கல்லில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் காப்பாற்றினர்.
    குள்ளனம்பட்டி:

    ஒட்டன்சத்திரம் அருகே கருப்பணபுரத்தை சேர்ந்தவர் சீத்தாராமன். இவரது மனைவி கல்பனா (வயது21). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் கல்பனா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

    திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்த கல்பனா தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தார்.

    பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்வதற்கு முயன்ற கல்பனாவை ரெயில்வே போலீசார் வடிவேல் மற்றும் சபீதா ஆகியோர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினர்.

    மேலும் கல்பனாவின் தாய் மற்றும் சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் கல்பனாவை ஒப்படைத்தனர். ரெயில்வே போலீசாரை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டினார். #tamilnews
    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் குற்றச்செயல்களை கண்காணிக்கும் பொருட்டு ரெயில் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இதில் 17 கேமிராக்கள் செயல்பாட்டில் இல்லை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கும், ஈரோடு, ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கும் செல்லலாம். இதுதவிர நாகூர் வரை செல்லக்கூடிய ரெயில்மார்க்கம் திண்டுக்கல் பகுதியில் இருந்து உள்ளது.

    எனவேதான் திண்டுக்கல் ரெயில்நிலையத்திற்கு தினசரி 70-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கிறது. எனவே இந்த ரெயில்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    குற்றச்செயல்களை கண்காணிக்கும் பொருட்டு ரெயில் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இதில் 17  கேமிராக்கள் செயல்பாட்டில் இல்லை.

    அதில் வீடியோ ரெக்கார்டும் பதிவாகவில்லை. இதுபோன்ற நிலையால் சமூகவிரோத செயல்கள் நடைபெற்றால்கூட அதிகாரிகளுக்கு எந்தவித தகவலும் பரிமாற வழியில்லை. எனவே ரெயில்வே உயர்அதிகாரிகள் இந்த விசயத்தில் தனிக்கவனம் செலுத்தி கண்காணிப்பு கேமிராக்களை செயல்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திண்டுக்கல்:

    7 சி.பி.சி. பரிந்துரைத்த ரூ.18 ஆயிரம் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும், சம்பள நிர்ணய பார்முலாவை உயர்த்தி வழங்க வேண்டும், ரெயில்வே நிர்வாகத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வாரிசுகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு எஸ்.ஆர்.எம்.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மூர்த்தி தலைமையில் 50 பேரும், சுசிதரன் தலைமையில் 40 பேரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.திண்டுக்கல் ரெயில் நிலையம், பணியாளர்கள், ஆர்ப்பாட்டம்
    ×