search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டுக்கல் டிராகனஸ்"

    சென்னையில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. #TNPL2018 #DDvMP
    சென்னை:

    டிஎன்பிஎல் போட்டியின் இறுதி ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெற்றது. இதில் ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின.

    முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது.

    திண்டுக்கல் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை கைப்பற்றியது.

    சாம்பியன் பட்டம் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இட்ம் பிடித்த திண்டுக்கல் அணிக்கு 60 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அரை இறுதி வரை தேர்வான அணிகளுக்கு 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    சென்னையில் இன்று நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் அணியுடன் மதுரை அணி மோதுகிறது. டிஎன்பிஎல் கோப்பையை வெல்ல இரு அணிகளும் ஆவலுடன் உள்ளதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். #TNPL2018 #DDvMP
    சென்னை:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 3-வது தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம், நெல்லை சங்கர் நகர் ஐ.சி.எல். மைதானம், திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம் ஆகிய 3 இடங்களில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டிகள் நடைபெற்றன.

    கடந்த மாதம் 11-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. 5-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன.

    இதன் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    குவாலிபையர்-1 ஆட்டத்தில் திண்டுக்கல் அணி 75 ரன் வித்தியாசத்தில் மதுரையை வீழ்த்தியது. எலிமினேட்டர் போட்டியில் கோவை கிங்ஸ் 24 ரன் வித்தியாசத்தில் காரைக்குடி காளையை வீழ்த்தி வெளியேற்றியது. நேற்று முன்தினம் நடந்த குவாலிபையர்-2 ஆட்டத்தில் மதுரை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி வெளியேற்றியது.

    இந்நிலையில், டிஎன்பிஎல் போட்டியின் இறுதி ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன.

    இரு அணிகளும் இந்தப் போட்டித் தொடரில் 3-வது முறையாக மோதுகின்றன. இதில் திண்டுக்கல் அணியே 2 முறை வென்றுள்ளது. இதனால் அந்த அணி டிஎன்பிஎல் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றும் நம்பிக்கையுடன் இருக்கிறது.

    இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் இன்றைய இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. #TNPL2018 #NammaOoruNammaGethu
    ×