search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாராபுரம் தினசரி சந்தை"

    • நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அலுவலகம் அருகிலேயே தான் உள்ளது.
    • பொதுமக்கள் தங்கு தடை இன்றி வந்து செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    தாராபுரம்:

    தாராபுரம் உடுமலை சாலையில் உள்ளது தினசரி காய்கறி மார்க்கெட். இந்த சந்தை முன்பு பழைய பஸ் நிலையமாக இருந்தது. 1986-ம் ஆண்டு முதல் காய்கறி சந்தையாக செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. இங்கு தினசரி ஆயிரம் கிலோவிற்கு மேல் காய்கறி குப்பைகள் தேங்கி விடுகின்றன. இந்த சூழ்நிலையில் அருகிலேயே நகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்தம் மற்றும் நகராட்சியின் குடிநீர் தொட்டி ஆகியவை அமைந்துள்ளது. நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அலுவலகம் அருகிலேயே தான் உள்ளது.

    இந்த சூழ்நிலையில் இங்கு குப்பைகளை வாரத்திற்கு ஒரு முறை இரண்டு முறை அள்ளுவதால்குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது. மழைக்காலங்களில் குப்பைகள் ரோட்டில் அடித்துச் செல்லப்பட்டு மார்க்கெட் முழுவதும் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்படுகின்றன. இதனை உடனடியாக தீர்க்க வேண்டும் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் கடைக்காரர்கள் கூறி வந்த நிலையில் சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்தனர்.

    இதையடுத்து அங்கு வந்த தாராபுரம் தி.மு.க. நகர செயலாளர் பொறியாளர் முருகானந்தம் சாலை மறியல் செய்ய வேண்டாம் .உங்களுக்கு உடனடியாக குப்பைகளை அள்ளுவதற்கும் சாக்கடை வசதி மழைநீர் தண்ணீர் வெளியே செல்வதற்கு உண்டான வசதி அனைத்தும் செய்து தரப்படும் எனக் கூறியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது .இது குறித்து மார்க்கெட் தினசரி மார்க்கெட் கடைக்காரர் டேவிட் கூறிய போது, இங்கு மழை நீர் தேங்கி விடுகின்றது .மழை நீரோடு சாக்கடை நீரும் கலந்து வருகிறது .இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் .பொதுமக்கள் தங்கு தடை இன்றி வந்து செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    ×