search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்கள்"

    தாய்லாந்தில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மூன்று பேர் மற்றும் பயிற்சியாளருக்கு அந்நாட்டு அரசு குடியுரிமையை வழங்கியுள்ளது.
    பாங்காக் :

    தாய்லாந்தில் குகையில் சிக்கி தவித்த சிறுவர்கள் 12 பேர், அவர்களின் பயிற்சியாளர் என மொத்தம் 13 பேர், கடந்த ஜூலை 10-ஆம் தேதி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    18 நாள்கள் நடைபெற்ற மிகப்பெரும் போராட்டத்துக்குப் பிறகு, உயிருடன் அவர்கள் மீட்கப்பட்டனர். இந்த மீட்புப்பணிகள், உலக அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சிறுவர்கள் குகையில் சிக்கியதும், அவர்களுக்காக நடைபெற்ற மீட்புப்பணிகளும் இந்த ஆண்டில் நடைபெற்ற மறக்கமுடியாத நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களில் மூன்று பேர் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்த அகதிகள் என்பதால் அவர்களுக்கு தாய்லாந்து குடியுரிமை இல்லாமல் இருந்தது.

    இந்நிலையில், சிறுவர்கள் மூன்று பேர் மற்றும் பயிற்சியாளருக்கு தாய்லாந்து அரசு குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளது.

    இதனை வரவேற்பதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையம், ’சிறுவர்களுக்கு குடியுரிமை வழங்கியதன் மூலம் தாய்லாந்து அரசு அவர்களுக்கு முறையான அடையாளத்தை வழங்கியுள்ளது. தற்போது சமூகத்தின் முழு உறுப்பினராக இருந்தவாறு அவர்கள் நினைத்ததை சாதிக்க முடியும்’ என தெரிவித்துள்ளது.
    தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கியுள்ள கால்பந்தாட்ட பயிற்சியாளர் மற்றும் சிறுவர்களை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்களை நாளை அனுப்ப உள்ளதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். #ThaiCaveRescue
    பாங்காக்:

    தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. குகைக்குள் உள்ள சிறுவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை மீட்பதற்கு  கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.

    முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நேற்று  மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது. தேசமயம் அந்தப் பகுதியில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே,  குகைக்குள் சிக்கியுள்ள 13 பேரையும் கூடிய விரைவில் மீட்க வேண்டிய நெருக்கடி அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், குகைக்குள் சிக்கியுள்ள பயிற்சியளர் மற்றும் 12 சிறுவர்களை மீட்பதற்காக, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா கார் நிறுவன தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்க் அவரது நிறுவனத்தின் போக்குவரத்து திட்டங்களை உருவாக்கும் தலைசிறந்த சுரங்கப்பாதை கட்டுமான பொறியாளர்களை நாளை தாய்லாந்துக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், குகையின் மேற்புறத்தில் இருந்து ஒரு மீட்டர் அளவிற்கு துளையிட்டு நைலானில் செய்யப்பட்ட பைப்புக்களை செலுத்துவதன் மூலம் குகைக்குள் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க முடியும் என அவர் தெரிவித்தார். 
    ×