search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாண்டிக்குடி"

    தாண்டிக்குடியில் ஊருக்குள் புகுந்த ஒற்றையானையால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பெரும்பாறை மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமங்களை ஒட்டிய வனப்பகுதியில் யானை, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு, விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    தாண்டிக்குடி அய்யப்பன் கோவில் அருகே வசித்து வருபவர் நாகராஜ்(வயது45). இவர் நேற்றிரவு தனது குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வெளியே சத்தம் கேட்டதால் எட்டிபார்த்தபோது ஒற்றையானை நின்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அச்சத்தில் வீட்டினுள்ளளே முடங்கினர். ஒற்றையானை அங்கிருந்த செட் மற்றும் மரகட்டைகளை சேதப்படுத்தி வனப்பகுதிக்குள் சென்றது. திடீரென ஒற்றையானை ஊருக்குள் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    தாண்டிக்குடி அருகே கார் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ள வாழைகிரி என்ற பகுதியில் தாண்டிக்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அந்தபகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கார் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையை சேர்ந்த உதயநிதி என்ற மதி (வயது 27) என்பதும் அங்குள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் நின்று கொண்டிருந்த காரை திருடி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் பட்டுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காருடன் உதயநிதி பட்டுக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கைதான உதயநிதி மீது பட்டுக்கோட்டையில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    ×