search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தள்ளிய யானை கூட்டம்"

    • 7 யானைகள், 2 குட்டிகளுடன் சுரைக்காய் செடிகளை மிதித்து நாசப்படுத்தியது.
    • விளைநிலங்களில் புகுந்து சேதம்படுத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

    கோவை:

    கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியில் நேற்று இரவு மலைப்பகுதியில் இருந்து திடீரென வெளியேறிய யானை கூட்டம் விளைநிலங்களுக்கு புகுந்து பல்வேறு சேதாரங்களை ஏற்படுத்தியது.

    விளைநிலங்களுக்குள் புகுந்த 7 யானைகள், 2 குட்டிகளுடன் பழனிச்சாமி என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த சுரைக்காய் செடிகளை மிதித்து நாசப்படுத்தியது. மேலும் அருகிலுள்ள இளங்கோவன் என்பவரது தோட்டத்தில் 25 தென்னை மரங்களையும், கனகராஜ் என்பவரது தோட்டத்தில் 16 தென்னை மரங்களையும், வெள்ளிங்கிரி தோட்டத்தில் 5 தென்னை மரங்களையும் வேரோடு சாய்த்து தள்ளியது.

    மேலும் அருகில் இருந்த துறை என்பவரது தோட்டத்தில் உள்ள வீட்டின் கேட்டின் மதில் சுவரை இடித்து தள்ளி மஞ்சள் மூட்டைகளை எடுத்து சூறையாடியது. தொடர்ந்து இந்த பகுதியில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் விளைநிலங்களில் புகுந்து சேதம்படுத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

    வனத்துறையினர் யானைக் கூட்டங்களை விரட்டி மலைப்பகுதிகளுக்கு அனுப்பி விட்டாலும், மீண்டும் ஊருக்குள் புகுந்து விடுகிறது. இந்த நிலையில் சேதாரமான பகுதிகளை வனத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

    அவர்களிடம் அப்பகுதி விவசாயிகள், ஊர் பொதுமக்கள் யானைகள் வருவதை தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    ×