search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைவர் ஸ்டாலின்"

    நடிகர் ரஜினிகாந்த் இன்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். #Rajinikanth #RajiniMeetsStalin
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் வரும் 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.  திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.

    அவ்வகையில், சென்னை அண்ணாநகரில் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்தார். அப்போது இருவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்தில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தார். 



    இந்நிலையில், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சென்றார். அப்போது, தனது மகள் திருமணத்திற்கான அழைப்பிதழ் வழங்கி திருமணத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். #Rajinikanth #RajiniMeetsStalin
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதியை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். #GajaCyclone #Stalin
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் காந்தி நகரில் புயல் பாதித்த பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    கஜா புயல் வரும் என மத்திய அரசு எச்சரித்திருந்ததால், ஓரளவுக்கு தமிழக பேரிடர் குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது.

    புயல் ஏற்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்ததால் தமிழக அரசு ஓரளவு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அரசை பாராட்டினேன். தவறு நடந்தால் தட்டிக்கேட்கும், பாராட்டக்கூடிய வகையில் செயல்பட்டால் பாராட்டும் இயக்கம் திமுக.



    புயல் பாதித்த பகுதிகளை இன்று பார்வையிட்டேன். கஜா புயலால் எட்டு மாவட்டங்களில் அதிக பாதிப்பு அடைந்துள்ளது. 

    மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் மின் சீரமைப்பு பணியை விரைந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் வேகமாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்புகளை மேலும் குறைத்திருக்கலாம் என தெரிவித்தார். #GajaCyclone #Stalin
    சென்னை வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். #DMK #Stalin #SitaramYechury
    சென்னை:

    மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக பல்வேறு கட்சி தலைவர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் வீட்டுக்கு இன்று நேரில் சென்றார்.



    அவரை திமுக தலைவர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார். அப்போது, எம்.பி கனிமொழி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இந்த சந்திப்பு குறித்து யெச்சூரி கூறுகையில், தமிழகத்தில் திமுகவுடன் இணைந்து எதிர் வரும் தேர்தலை சந்திக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார். #DMK #Stalin #SitaramYechury
    டெல்லியில் விரைவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #ChandrababuNaidu #Stalin
    சென்னை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

    அதன்படி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரையும் சந்தித்தார். தொடர்ந்து பல்வேறு மாநிலங்களுக்கு சென்று முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

    இந்நிலையில், சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு இன்று மாலை சந்தித்து பேசினார். அப்போது, இருவரும் சேர்ந்து செய்தியாளர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டி:



    மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை வீழ்த்தும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வரும் நடவடிக்கையை வரவேற்று திமுக சார்பில் ஏற்கனவே அறிக்கை விடுத்திருக்கிறேன்.

    பிரதமர் மோடி ஆட்சியில் மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. சி.பி.ஐ., ஆர்.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

    டெல்லியில் விரைவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளேன்.

    மேலும், தேசிய அளவிலான கூட்டணிக்கு திமுக ஆதரவு அளிக்கும் என ஸ்டாலின் தெரிவித்தார். #ChandrababuNaidu #Stalin
    சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசினார். #ChandrababuNaidu #Stalin
    சென்னை:

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று கூறி பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடு விலகினார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

    அதன்படி அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சமீபத்தில் சந்தித்து பேசினார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரையும் சந்தித்தார்.

    ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மிதலைவர் கெஜ்ரிவால், சரத்யாதவ் ஆகியோரையும் சந்தித்து இருந்தார்.

    முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவே கவுடா மற்றும் கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி ஆகியோரை நேற்று சந்தித்தார். 



    இந்நிலையில், சந்திரபாபு நாயுடு இன்று மாலை திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

    அவருக்கு ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது துரை முருகன், ஆ.ராசா, டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோரும் உடனிருந்தனர். 

    பாஜகவுக்கு எதிராக ஓரணியில் சேர்வது குறித்து ஸ்டாலினும், நாயுடுவும் ஆலோசனை நடத்தினர். #ChandrababuNaidu #Stalin
    சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #MKStalin #DMK #EdappadiPalaniswami #ADMK
    சென்னை:

    தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இதற்கிடையே, முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என மனுதாரர் கூடுதல் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இந்நிலையில், சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.



    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெடுஞ்சாலை டெண்டர் புகார் பற்றி சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

    ஆதாரங்கள் அழிப்புக்கு இடமளித்துவிடாமல் காலதாமதமின்றி சிபிஐ விசாரணையை தொடங்க வேண்டும். உலக வங்கியின் ஊழல் எதிர்ப்பு விதிகளை மீறியது சர்வேத அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவு. 

    சிபிஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதல்-அமைச்சர் பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும், இல்லையேல் ஆளுநர் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். #MKStalin #DMK #EdappadiPalaniswami #ADMK
    திமுக தலைவர் முக ஸ்டாலின் சிறுநீரக தொற்று காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Dmk #Stalin #ApolloHospital
    சென்னை:

    திமுக தலைவராக முக ஸ்டாலின் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, கட்சி பணிகளில் ஈடுபட்டு தொண்டர்களை ஊக்குவித்தும், கட்சி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறார்.

    இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் உடல் நிலை குறைவால் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், சிறுநீரக தொற்று காரணமாக திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வழக்கமான சிகிச்சைக்கு பின்னர் அவர் காலையில் வீடு திரும்புவார் என தெரிவித்தனர்.
    #Dmk #Stalin #ApolloHospital
    ×