search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைவர் ராகுல் காந்தி"

    அன்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்தியாவில் இன்று நடப்பது வேதனை அளிக்கிறது என பிரியங்கா முதன்முறையாக இன்று பேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்டார். #Congress #RahulGandhi #PriyankaGandhi #BJP
    அகமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது.

    அதன்பின்னர், காந்தி நகரில் உள்ள அடலஜ் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சமீபத்தில் கட்சியில் பொறுப்பேற்ற பிரியங்கா காந்தி பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பிரதமர் மோடி அரசு படுதோல்வி அடைந்துள்ளது.

    வரும் நாடாளுமன்ற தேர்தல் மூலம் மக்கள் தங்களின் எதிர்காலத்தை தேர்வு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு, விவசாயிகளின் எதிர்காலம் போன்றவை இந்த தேர்தலில் முக்கியமாக இருக்கும். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

    அன்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்தியாவில் இன்று நடப்பது வேதனை அளிக்கிறது என பிரியங்கா முதன்முறையாக இன்று பேசிய கட்சி நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.



    இதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், பாஜக வெறுப்பு அரசியலை கையாண்டு வருகிறது. தன்னாட்சி அமைப்புகளை பாஜக சீர்குலைக்கிறது. பாஜக ஆட்சியில் வேலையின்மை அதிகரித்து உள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏழைகளின் பணம் பணக்காரர்களுக்கு தரப்பட்டது. விவசாயி களிடம் இருந்து லாபம் வந்தாலும் அது 15 கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே செல்கிறது என குறிப்பிட்டார். #Congress #RahulGandhi #PriyankaGandhi #BJP
    பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பாதுகாப்பின்மையும் அச்சமும் மக்களிடையே அதிகரித்துள்ளது என குஜராத்தில் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #CongressWorkingCommittee #CWCMeeting
    அகமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியது. சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவிடத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தில் அவரது உருவச்சிலைக்கு சோனியா, மன்மோகன்சிங், பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

    மகாத்மா காந்தி தண்டி யாத்திரையை தொடங்கிய நாளான இன்று, சபர்மதி ஆசிரமத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு காரிய கமிட்டி கூட்டம் தொடங்கப்பட்டது. 

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா, ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், அகமது படேல், அசோக் கெலாட், நாராயணசாமி, சித்தராமையா, தருண் கோகாய், ஹரிஷ் ராவத் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். 



    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தேசத்தின் பாதுகாப்பில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.

    தேசப் பாதுகாப்பு பிரச்னையில் தோல்வி அடைந்துள்ள பிரதமர் மோடி, அதை ஏற்காமல் பிரச்னையை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தனக்கு ஏற்பட்டுள்ள மகத்தான தோல்விகளில் இருந்தும், போலியான கூற்றுக்களை மறைக்கும் வகையிலும், தொடர்ந்து பொய்களை கூறி மக்களை திசைதிருப்பி வருகிறார்.

    இந்தியா ஜனநாயகத்தின் மீது திடமான நம்பிக்கை கொண்ட நாடு. நமது ராணுவ படையால் நாம் பெருமிதம் கொள்வோம். வன்முறை மற்றும் பயங்கரவாதத்தால் நமது ராணுவம் எப்போதும் தோற்கடிக்கப்பட கூடாது என்பதே நமது எண்ணம்.

    பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பாதுகாப்பின்மையும் அச்சமும் மக்களிடையே அதிகரித்துள்ளது. பெண்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வணிகம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு அச்சத்துடன் வாழ்ந்து வரும் நிலை உள்ளதை இந்த கமிட்டி கண்டிக்கிறது.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேறின. #CongressWorkingCommittee #CWCMeeting
    ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #RahulGandhi #PMModi #RafaleIssue
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் பிரான்சிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளது. ரபேல் மோசடியில் பிரதமர் மோடி தவறு செய்துள்ளார். மோசடி நடந்துள்ளது தெளிவாக தெரிகிறது.

    பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பொய்களை கூறுகிறார். பிரதமர் மோடியினாலே அனில் அம்பானியை தான் தேர்வு செய்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஒப்புக்கொண்டுள்ளார்.



    பிரதமர் மோடி 30 ஆயிரம் கோடி ரூபாயை விமானப் படையிடம் இருந்து கொள்ளையடித்து அனில் அம்பானிக்கு கொடுத்துள்ளார். இதைத்தான் நாங்கள் கடந்த ஓராண்டாக எழுப்பி வருகிறோம்.

    தற்போது மத்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் அளித்த அறிக்கையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகையில், பிரதமர் மோடி தனியாக பேசி உள்ளார் என கூறப்பட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பொய்யான தகவல்களை அளித்துள்ளது என தெரிவித்துள்ளார். #RahulGandhi #PMModi #RafaleIssue
    தேசிய பாதுகாப்பு குறித்து என்னுடன் ஒரே மேடையில் 10 நிமிடங்கள் விவாதிக்க தயாரா? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். #RahulGandhi #PMModi
    புதுடெல்லி:

    சிறுபான்மையினர் பிரிவினருக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டில் உள்ள அனைத்து இயக்கங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகமாக பிரதமர் மோடி இருந்து வருகிறார்.

    மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் அனைத்து அமைப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ். தலையீடு உள்ளது. இந்த மாநிலங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், பல்வேறு அமைப்புகளை காப்பாற்றி உள்ளது.
    மேலும், பல்வேறு அமைப்புகளில் வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து நீக்கப்படுவார்கள்.
     


    இந்தியாவில் அனைத்து மதங்களும் மொழிகளும் மதிக்கப்பட வேண்டும். பிற மதங்களை சேர்ந்தவர்கள் சமமாக நடத்த வேண்டும். ஆனால், மத்திய அரசு இந்தியாவை பிரித்துப் பார்க்கிறது. 

    தேசிய பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி என்னுடன் ஒரே மேடையில் 10 நிமிடங்கள் விவாதிக்க தயாரா? அவருக்கு பயம் ஏற்பட்டது முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. 

    தேசத்தை விட நாங்கள் பெரியவர்கள் என பா.ஜ.க. நினைக்கிறது. இன்னும் 3 மாதங்களில் நாடே உயர்ந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். லோக்சபா தேர்தலை பார்த்து பிரதமருக்கு பயம் ஏற்பட்டு உள்ளது. மோடி என்கிற இமேஜ் முடிவுக்கு வந்து விட்டது என தெரிவித்துள்ளார். #RahulGandhi #PMModi
    கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொன்னான நேரத்தை பிரதமர் மோடி பொய்கள் பேசியே வீணாக்கி விட்டார் என குற்றம்சாட்டினார். #Congress #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் அதற்கு தயாராக தொடங்கி உள்ளன.
     
    கேரளாவிலும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ஆளும் கம்யூனிஸ்டு கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும் பல்வேறு வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டன. கேரளாவில் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வை கொண்ட பா.ஜனதா கட்சியும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை கருத்தில் கொண்டு காய்களை நகர்த்தி வருகிறது.

    சபரிமலை விவகாரத்தை பாராளுமன்ற தேர்தலில் கையில் எடுத்து ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை கைப்பற்ற பா.ஜ.க திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:



    மூன்று மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகள் பயிர்க்கட்ன்களை தள்ளுபடி செய்துள்ளோம். இதேபோல், வரும் பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு எதிராக பிரதமர் மோடி செய்த தவறுகளை எல்லாம் சரிசெய்வோம்.

    கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொன்னான நேரத்தை பிரதமர் மோடி வீணாக்கி விட்டார். 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் ஒன்றையும் நிறைவேற்றவில்லை என தெரிவித்துள்ளார்.

    ராகுல்காந்தியின் வருகையால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். #Congress #RahulGandhi 
    துபாய் பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி இந்தியாவில் ஆத்திரமும், சகிப்புத்தன்மையின்மையும் ஆதிக்கம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். #Intolerance #angerreign #angerreignIndia #RahulGandhi
    துபாய்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபாயில் இரண்டாவது நாளாக இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    அதில் ஒருகட்டமாக துபாய் பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றிய ராகுல் கூறியதாவது:-

    20-ம் நூற்றாண்டு காலகட்டம் மூளை வறட்சியான நாட்களாக கழிந்தது. ஆனால், 21-ம் நூற்றாண்டில் மக்கள் தாங்கள் விரும்பிய இடங்களுக்கும், தங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கும் இடங்களுக்கும் தற்போது செல்கின்றனர். அவர்களுக்கான வாய்ப்புகளை அவர்களின் தாய்நாடு உருவாக்கித்தர வேண்டும்.



    இந்தியா பல சிந்தனைகளை உருவாக்கியுள்ளது. அதேபோல், பல சிந்தனைகள் ஒன்றிணைந்துதான் இந்தியா உருவாகியுள்ளது. மற்றவர்களின் சிந்தனைகளை கேட்பதும் இந்தியாவின் சிந்தனையாக உள்ளது.

    சகிப்புத்தன்மை என்பது நமது கலாசாரத்தோடு ஒன்றர கலந்த ஒன்றாக இருந்து வந்துள்ளது. ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்தியாவில் சமுதாய பிரிவினையும், அளவுக்கதிகமான ஆத்திரமும், சகிப்புத்தன்மையின்மையும் தலையெடுத்து வருவதை நாம் பார்க்கிறோம். அதிகாரத்தில் இருப்பவர்களின் மனப்போக்கில் இருந்துதான் இவை உருவாகின்றன.

    தங்கள் கருத்துகளை தெரிவிப்பவர்கள் கொல்லப்படும் இந்தியாவையும், பத்திரிகையாளர்கள் துப்பாக்கியால் சுடப்படும் இந்தியாவையும் நாங்கள் விரும்பவில்லை. இது மாற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இந்த சவாலை முன்வைத்துதான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை நாங்கள் சந்திக்கப் போகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Intolerance #angerreign #angerreignIndia #RahulGandhi
    துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காங். தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்தார். #Dubai #Congress #RahulGandhi #SpecialStatusforAndhraPradesh
    துபாய் :

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை துபாய் சென்றடைந்தார். துபாய் விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    துபாய் சென்றுள்ள ராகுல் அங்குள்ள தொழிலாளர் காலனியில் இந்திய சமூகத்தினர் மற்றும் மாணவர்களை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:



    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து துபாயில் வேலை செய்து வருகிறீர்கள். அதன்மூலம் இந்தியாவிற்கு பெரும் உதவி செய்து வருகிறீர்கள். எனவே உங்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நீங்கள் சிந்தும் வியர்வை, ரத்தத்தினால் இந்த நாட்டை வளப்படுத்தி வருகிறீர்கள். உங்களால் அனைத்து இந்தியர்களும் பெருமிதம் அடைகிறோம்

    வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். #Dubai #Congress #RahulGandhi #SpecialStatusforAndhraPradesh
    பிரதமர் மோடியை வீழ்த்த எந்தவித பயமுமின்றி விவசாயிகளும், இளைஞர்களும் முன்வர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். #RahulGandhi #PMModi #Farmers
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடியின் ஆட்சியை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

    கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் போது முன்னால் வந்து ஆடுவது சிரமமாக இருக்கும். ஆனால், நாம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை வீழ்த்துவதற்கு களத்தில் முன்னால் வந்து ஆடி சிக்சர் அடிக்க வேண்டும்.



    விவசாயிகளும், இளைஞர்களும் எந்தவித பயமுமின்றி முன்வர வேண்டும். களத்தில் அவர்கள் முன்னால் வந்து ஆடவேண்டும்.
    கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரதமர் மோடி தடுப்பு ஆட்டத்தை மட்டுமே ஆடி வந்துள்ளார்.
     
    சமீபத்தில் நடைபெற்ற மூன்று  மாநில சட்டசபை தேர்தல்களில் விவசாயிகள் தங்கள் பலத்தை நிரூபித்துக் காட்டியுள்ளனர். இதன்மூலம் உலகுக்கு நமது பலத்தையும் வெளிப்படுத்தி உள்ளோம்.

    கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்யாததை, நாங்கள் ஆட்சிக்கு வந்த 2 தினங்களில் செய்துகாட்டி உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். #RahulGandhi #PMModi #Farmers
    அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்ஸரா ரெட்டியை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். #Congress #RahulGandhi #ApsaraReddy
    புதுடெல்லி:

    சமூக செயற்பாட்டாளராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றி வருபவர் திருநங்கை அப்சரா ரெட்டி. இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    இந்நிலையில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டியை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, அப்சரா ரெட்டி இன்று டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். #Congress #RahulGandhi #ApsaraReddy
    ராஜஸ்தானில் இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவரது கட்சி தலைவர்களின் பெயரே தெரிவதில்லை என குற்றம் சாட்டினார். #RajasthanAssemblyElections #BJP #PMModi #Congress #RahulGandhi
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை மறுதினம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் இந்த மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதையடுத்து, அங்கு அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

    இந்நிலையில், பாஜக சார்பில் ராஜஸ்தான் மாநிலம் சுமர்பூர் மற்றும் பாலி ஆகிய பகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றார். சுமர்பூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:

    சோனியா மற்றும் ராகுல் காந்தியின் வருமான வரி கணக்கு விபரங்களை மறு ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது மத்திய அரசுக்கு கிடைத்த வெற்றி.

    அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளை விசாரிக்க தொடங்கி உள்ளதால் ஜாமீனில் இருக்கும் சோனியாவும், ராகுலும் கோபத்தில் உள்ளனர்



    ராஜஸ்தானின் ஜாட் சமூகத்தை சேர்ந்த விவசாயி கும்பாராம்ஜி சமீபத்தில் மறைந்தார். காங்கிரஸ்காரரான இவர் அப்பகுதியில் புகழ்வாய்ந்தவராக திகழ்ந்தார்.

    ஆனால், காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி இவரது பெயரை கும்பாராம்ஜி என்பதற்கு பதிலாக கும்பகர்ணன்ஜி  என அழைக்கிறார்.

    தனது கட்சியின் முக்கிய பிரமுகரின் பெயரைக்கூட காங்கிரஸ் தலைவருக்கு சரியாக உச்சரிக்க முடியவில்லை. இதுபோன்றவர்கள்  ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை மக்கள் அறிவார்கள்.

    ராஜஸ்தான் மாநில மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். ராஜஸ்தானின் ஒவ்வொரு பூத்திலும் வெற்றி பெற வேண்டியது மட்டுமே எங்கள் வேலை என தெரிவித்துள்ளார். #RajasthanAssemblyElections #BJP #PMModi #Congress #RahulGandhi
    உத்தரப்பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானோர் குடும்பத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர். #UPTrainDerailed #TrainAccident #SoniaGandhi #RahulGandhi
    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலம் மால்டா நகரில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் வழியாக டெல்லிக்கு ‘நியூ பராக்கா எக்ஸ்பிரஸ்’ ரெயில் நேற்று இரவு புறப்பட்டது. இன்று காலை உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் ஹர்சந்த்பூர் ரெயில்நிலையம் அருகே வேகமாக சென்று கொண்டிருந்த போது திடீரென ரெயில் தடம் புரண்டது.

    என்ஜின் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 9 பெட்டிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 7 பயணிகள் பலத்த அடிபட்டு இறந்தனர். மேலும் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரெயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.



    இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

    உ.பி.யில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

    இதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில், உ.பி. ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகளில் மாநில அரசு விரைந்து ஈடுபட்டிருக்கும் என நம்புகிறேன். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். #UPTrainDerailed #TrainAccident #SoniaGandhi #RahulGandhi
    ×