search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை செயலர்"

    தூத்துக்குடியில் நீர் மாசுபாடு குறித்து மத்திய அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய நீர்வளத்துறைக்கு தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுதியுள்ளார். #Thoothukudi #Sterlite #GirijaVaidyanathan
    சென்னை:

    தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை மிகப்பெரிய போராட்டம் மற்றும் உயிர்பலிக்கு பிறகு மூடப்பட்டது. ஆலையை மீண்டும் திறக்கும் முயற்சியில் வேதாந்தா நிறுவனம் ஈடுபட்டுள்ள நிலையில், ஆலையை திறக்க விட மாட்டோம் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடியில் நீர் மாசுபாடு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து மத்திய நீர்வளத்துறை தூத்துக்குடியில் ஆய்வு நடத்தி அறிக்கை தயார் செய்துள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தூத்துக்குடியில் நீர்வளத்துறையின் ஆய்வு தேவையற்றது என குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், ஆய்வு நடத்தியது வீணானது எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், தூத்துக்குடியில் தற்போதுதான் அமைதி நிலை திரும்பி உள்ள நிலையில், மத்திய நீர்வளத்துறையின் இந்த ஆய்வால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஆய்வறிக்கையை திரும்ப பெற வேண்டும் எனவும் கடிதத்தில் எழுதியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, நிலத்தடி நீர் தொடர்பான மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஆய்வு அறிக்கை அறிவியல் பூர்வமானதாக இல்லை எனவும், ஆய்வின் முடிவுகள் ஆலை நிர்வாகத்துக்கு சாதகமாக உள்ளதாகவும் கிரிஜா வைத்தியநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகவே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியதாகவும், தமிழக அரசை கேட்காமல், நீர் வளம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கிரிஜா வைத்தியநாதன் மத்திய நீர்வளத்துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். #Thoothukudi #Sterlite #GirijaVaidyanathan
    ×