search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை செயலக ஊழியர் கைது"

    சென்னை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்த தலைமை செயலக ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ.காலனி திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவர் சென்னை தலைமை செயலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    கண்ணனுக்கு மதுரை ஆணையூரை சேர்ந்த ரங்கசாமி என்பவரோடு அறிமுகம் ஏற்பட்டது. அப்போது ரங்கசாமி, தனக்கு தெரிந்தவர் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க உதவி செய்ய முடியுமா? என கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த கண்ணன், ரூ.30 லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார்.

    இதனை நம்பி, ரங்கசாமி, கடந்த 2017-ம் ஆண்டு கண்ணனிடம் ரூ.30 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் கண்ணன் நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதையடுத்து ரங்கசாமி பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

    அரசு வேலை வாங்கி கொடுக்காத நிலையில் கண்ணன், ரூ.30 லட்சம் பணத்தையும், திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக பணம் கொடுக்காமலும், வேலை வாங்கி தராமலும் ஏமாற்றிய கண்ணன் மீது ரங்கசாமி போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தார்.

    இதன்படி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ரங்கசாமி புகார் அளித்தார்.

    இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க கமி‌ஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதன் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கண்ணன் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.

    இதையடுத்து போலீசார் கண்ணனை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×