search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு"

    3 அ.தி.மு.க.வினரை விடுதலை செய்தது போல் இந்து அமைப்பினர்-வீரப்பனின் சகோதரரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார். #DharmapuriBusBurning #BJP #LaGanesan
    திருப்பரங்குன்றம்:

    பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று வழிபாடு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு சிறப்பாக எடுத்தாக எதிர்கட்சிகள் பாராட்டின. ஆனால் அடுத்த நாளே குறை சொல்ல தொடங்கி விட்டார்கள்.

    எதிர்கட்சிகள் அப்படித்தான் செய்வார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அரசிடம் கோரிக்கை வைக்கலாம். கோ‌ஷம் கூட எழுப்பலாம். ஆனால் வன்முறையில் ஈடுபடக்கூடாது.

    எனவே அரசும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களது வாழ்வாதாரம் காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு வழங்கும் நிவாரணத் தொகையை நேரிடையாக வங்கி கணக்கில் செலுத்தினால் தான் முழு தொகையும் பயனாளிகளுக்கு கிடைக்கும். வெள்ளச் சேதங்கள் குறித்து தமிழக முதல்வர் அறிக்கை அளித்த பின்பு தான் அதற்கான நிவாரணத்தை மத்திய அரசு வழங்க முடியும்.

    புயல் பாதிப்பால் ஏற்பட்ட இழப்பீடுகளுக்காக மத்திய அரசிடம் தமிழக பா.ஜ.க. சார்பில் அறிக்கை கொடுக்க இருக்கிறோம்.

    ரஜினி, கமல், விஜய் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் ஆட்சிக்கு வர வேண்டும்? என தீர்மானிப்பவர்கள் மக்கள் தான்.

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறோம்.


    அ.தி.மு.க. தொண்டர்கள் 3 பேரை விடுதலை செய்தது பிரச்சனை இல்லை. இதே போல கோவை சிறையில் ஆயுள் கைதிகளாக உள்ள இந்து இயக்கத்தை சேர்ந்தவர்கள் குறிப்பாக சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் போன்றவர்களையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கேட்கிறீர்கள். இடைத்தேர்தலே நடைபெறுமா? என்ற நிலையில் பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

    நரேந்திர மோடியின் மக்கள் செல்வாக்கை பார்த்து பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை சேர்த்துக் கொண்டு போட்டியிட நினைப்பவர்கள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள தயங்குவது போல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநில செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.

    தொடர்ந்து திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து தனியார் மண்டபத்தில் இல.கணேசன் தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. #DharmapuriBusBurning #BJP #LaGanesan
    தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த அதிமுக பிரமுகர்கள் விடுதலை செய்யப்பட்டது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. #DharmapuriBusBurning #ADMK #TNGovernor #BanwarilalPurohit
    சென்னை:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள சுமார் 1800 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான கோப்புகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு அனுப்பியது. அதில், தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அதிமுக  பிரமுகர்கள் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

    ஆனால், அவர்கள் 3 பேரையும் முன்னதாகவே விடுதலை செய்ய அனுமதிக்க இயலாது என்று கவர்னர் கூறி விட்டார். பின்னர் மீண்டும் தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆய்வு செய்த கவர்னர், 3 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து மூவரும் நேற்று வேலூர் சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டனர்.


    இந்நிலையில் 3 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளித்தது குறித்து ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது. அதில் அரசியலமைப்பு சட்டம் 161வது பிரிவின்படி 3 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 13 ஆண்டுகள் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #DharmapuriBusBurning #ADMK #TNGovernor #BanwarilalPurohit
    தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அதிமுக பிரமுகர்கள் 3 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்ததையடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். #DharmapuriBusBurning #ADMK #TNGovernor #BanwarilalPurohit
    சென்னை:

    பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு கடந்த 2000ம் ஆண்டு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி புறநகரான இலக்கியம்பட்டியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பஸ் மீது அ.தி.மு.க.வினர் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தனர். இதில் ஹேமலதா, காயத்ரி, கோகிலவாணி ஆகிய 3 மாணவிகள் தீயில் கருகி பலியானார்கள். 16 மாணவிகள் காயம் அடைந்தனர்.

    இந்த வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர்கள் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பனின் மரண தண்டனையை கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆயுள் தண்டனையாக குறைத்தது.

    பின்னர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள சுமார் 1800 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அந்த கைதிகள் பற்றிய விபரம் மற்றும் அவர்கள் எத்தனை ஆண்டுகளாக சிறையில் உள்ளனர் என்பன போன்ற தகவல்களை திரட்டி கோப்புகளாக தயாரித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு அனுப்பியது.



    தமிழக அரசு அனுப்பிய கைதிகள் விடுதலை பரிந்துரை பட்டியலில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை பெற்ற நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றிருந்தன. ஆனால் அவர்கள் 3 பேரையும் முன்னதாகவே விடுதலை செய்ய அனுமதிக்க இயலாது என்று கவர்னர் கூறி விட்டார்.  3 பேரை விடுவிப்பதை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தி, அந்த ஆவணத்தையும் கவர்னர் திருப்பி அனுப்பி விட்டார்.

    அதன்பிறகும் அவர்களை விடுவிக்கும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டது. இது தொடர்பாக கவர்னருக்கு புதிய ஆவணம் அனுப்பப்பட்டது. அதில், “பஸ் எரிப்பு திட்டமிட்டு நடந்தது அல்ல. உணர்ச்சி வேகத்தில் நடந்து விட்ட ஒன்று” என்று தமிழக அரசு குறிப்பிட்டது. தமிழக அரசின் இந்த புதிய விளக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளார் கவர்னர் பன்வாரிலால் புரோகித். அத்துடன், 3 பேரையும் விடுவிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதையடுத்து நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரும் வேலூர் சிறையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டனர். #DharmapuriBusBurning #ADMK #TNGovernor #BanwarilalPurohit

    ×