search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தயாரிப்புகள்"

    • சேலத்தில் தடைசெய்யப்பட்ட 103 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • தடை செய்யப்பட்ட பொருட்–களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் மற்றும் சேலம் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் சுமார் 103 கிலோ எடையுள்ள, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி தட்டுகள், டம்ளர்கள், ஸ்பூன்கள், உறிஞ்சு குழல்கள் மற்றும் கேரி பேக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுபோன்ற ஆய்வுகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் எனவும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இதுபோன்ற ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களை உபயோகம் மற்றும் விற்பனை செய்வதை தவிர்க்குமாறும், நெகிழி கேரி பேக்கிற்கு பதிலாக மஞ்சப்பை போன்ற மாற்றுப் பொருட்களை பயன்படுத்துமாறும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தவறும்பட்சத்தில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

    ×