search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனிப்படை போலீசார் விசாரணை"

    • குறைந்த அளவு பணம் கொடுத்தால் அதிகம் பணம் தருவதாக கூறி அவரிடம் ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.
    • பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் கொடுத்தால் ரூ.55 லட்சம் கொடுப்பதாக அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    சேலம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 39). தொழில் அதிபர். சேலத்தில் உள்ள இவருடைய நண்பர் மூலம் ஒரு கும்பல் இவருக்கு அறிமுகமாகி உள்ளது.

    ஆசை வார்த்தை

    பின்னர் அந்த கும்பல், குறைந்த அளவு பணம் கொடுத்தால் அதிகம் பணம் தருவதாக கூறி அவரிடம் ஆசை வார்த்தை கூறி உள்ளனர். பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் கொடுத்தால் ரூ.55 லட்சம் கொடுப்பதாக அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி வெங்கடேஷ் ரூ.50 லட்சம் பணத்துடன் காங்கேயத்தில் இருந்து சேலத்திற்கு காரில் வந்து கொண்டு இருந்தார். சேலம் இரும்பாலை அருகே வந்த போது எதிரே ஒரு காரில் போலீஸ் உடை அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து தாங்கள் போலீஸ் என்று கூறி அவரிடம் சோதனை நடத்தினர்.

    அப்போது அவர் வைத்திருந்த ரூ.50 லட்சத்தை பறித்துக்கொண்டனர். பின்னர் இந்த பணத்திற்கு உரிய விளக்கம் அளிக்க இரும்பாலை போலீஸ் நிலையத்திற்கு வரவேண்டும் என்று கூறி விட்டு அந்த கும்பல் காரில் சென்று விட்டது.

    போலி போலீஸ்

    இதுகுறித்து அவர் இரும்பாலை போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்தார். அப்போது பணம் பறித்து சென்றவர்கள் போலீசார் இல்லை என்பதும், போலி போலீஸ் என்பதும் தெரிய வந்தது.

    பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் என்று கூறி ரூ.50 லட்சம் பறித்து சென்ற திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த மோகன்பாரதி (26), வினித்குமார் (27), அருப்புக்கோட்டையை சேர்ந்த முத்துமணி (30), காங்கேயத்தை சேர்ந்த பிரகதீஸ்வரன் (24), சிவகாசியை சேர்ந்த கணேசன் (58), குமார் (41) ஆகிய 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் பணம் பறித்ததை ஒப்புக்கொண்டனர். இந்த கும்பலின் தலைவன் உள்பட சிலர் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 6 பேரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கும்பலை பிடிக்க கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.

    5 பேரிடம் விசாரணை

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கி இருந்த கடத்தல் கும்பல் தலைவன் உள்பட 5 பேர் நே ற்று போலீசாரிடம் சிக்கினர். பின்னர் தனிப்படை போலீசார் அவர்களை சேலத்திற்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் பணம் ப றிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. சிக்கிய 5 பேரையும் இன்று மாலை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ×