search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனிப்படை சோதனை"

    • தனிப்படை போலீசார் சோதனையில் கஞ்சா கும்பல் சிக்கினர்.
    • இது தவிர தப்பி ஓடிய கே.புதூர், பரசுராமன்பட்டி மெர்வின் ஜோஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருப்பாலையில் கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் பதுங்கி இருப்பதாக கமிஷனர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் ஆலோசனைப்படி, தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது எஸ்.கொடிக்குளம், பாரத் நகரில் கஞ்சா விற்கப்படுவது தெரிய வந்தது. எனவே தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு வீட்டுக்குள் 6 பேர் கும்பல் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. எனவே போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். இதற்கிடையே போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து அங்கு உள்ள ஒரு வீட்டுக்குள் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு 40 கிலோ கஞ்சா, அரிவாள், 2 கத்தி, 4 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து மேற்கண்ட 5 பேரையும் தனிப்படை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் எஸ்.கொடிக்குளம், பாரத் நகர் டேவிட் என்ற மரிய ஆரோக்கியதாஸ் (வயது 25), கணபதி மகன் அகஸ்டின் (வயது 23), கடச்சனேந்தல் ரமேஷ் மகன் சியாம்சுந்தர் (வயது 22), கோச்சடை, நடராஜ் நகர் லோகநாதன் மகன் விக்னேஷ் (வயது 23), குமரேசன் மகன் முருகானந்தம் (வயது 22) என்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்ததாக மேற்கண்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இது தவிர தப்பி ஓடிய கே.புதூர், பரசுராமன்பட்டி மெர்வின் ஜோஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×