search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் பற்றாக்குறை"

    • வடமதுரை, அய்யலூர் பகுதியில் அனுமதியின்றி மணல் பிளாண்ட்டுகள் இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை, அய்யலூர், எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மணல் பிளாண்ட்டுகள் உள்ளன.

    அப்பகுதியில் உள்ள ஓடை மற்றும் தோப்புகளில் இந்த பிளாண்ட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இவை முறையாக அனுமதி பெற்று இயங்கி வருகிறதா என தெரியவில்லை. ஆறு மற்றும் குளங்களில் அதிக அளவு மணல் எடுக்கப்படு வதால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்ப ட்டுள்ளது.

    கடந்த சில ஆண்டு களாகவே போதிய அளவு மழைபொழிவு இல்லாமல் விவசாயிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவ தால் அவர்கள் மேலும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    எனவே அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள மணல் பிளாண்ட்டுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×