search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேப்லெட்கள்"

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவுக்காக அரசு பள்ளிகளுக்கு வழங்கிய டேப்லெட்களில் ஆபாச படங்கள் தோன்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ChhattisgarhGovt
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ‘டேப்-லெட்’ வழங்கப்பட்டு இருக்கிறது. அதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்.

    இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு இதுவரை 51 ஆயிரம் பள்ளிகளுக்கு ‘டேப்-லெட்’டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ‘டேப்-லெட்’டுகள் இணைய தள வசதியுடன் செயல்படும்.

    துர்க், சுர்குஜா, பாஸ்டர் ஆகிய மாவட்டங்களில் வழங்கிய ‘டேப்- லெட்’டுகளை ஓப்பன் செய்தவுடனேயே ஆபாச படங்கள் திரையில் தோன்றி ஓடுகின்றன.

    இதுபற்றி தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, மறு உத்தரவு வரும் வரை இந்த ‘டேப்-லெட்’டுகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அரசு வழங்கிய ‘டேப்- லெட்’டில் எப்படி ஆபாச படங்கள் வந்தது? என்பது தெரியவில்லை.

    இது சம்பந்தமாக சத்தீஸ்கர் மாநில தகவல் தொழில்நுட்ப துறை திட்ட மேலாளர் நிலேஷ் சோனி கூறும் போது, குறிப்பிட்ட ‘டேப்-லெட்’டுகளில் யாராவது ஆபாச படம் பார்த்திருக்க வேண்டும். அல்லது டவுன் லோடு செய்திருக்க வேண்டும்.

    அதை பார்த்து கொண்டு இருக்கும் போதே சில விளம்பரங்கள் தோன்றும். அதை ‘கிளிக்’ செய்தால் இவ்வாறு ‘டேப்-லெட்’டுகளையே ஆக்கிரமித்து ஆபாச படம் தானாகவே தோன்ற ஆரம்பித்து விடும்.

    இப்படித்தான ‘டேப்- லெட்’டில் ஆபாச படம் வந்துள்ளது. இவற்றை நீக்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதற்காக சென்னையில் இருந்து நிபுணர் குழு அழைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் சரி செய்தபிறகு பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்று கூறினார்.
    ×