search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெஸ்ட் அணி"

    இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஆதில்ரஷித் சேர்க்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்து உள்ளார். #ENGvIND #AdilRashid #MichaelVaughan
    லண்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது.

    இதில் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 1½ ஆண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளார்.

    இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஆதில்ரஷித் சேர்க்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டெஸ்ட் அணியில் ஆதில் ரஷீத் தேர்வு செய்யப்பட்டது கேலிக் குரியது.

    உள்ளூரில் நடக்கும் 4 நாள் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஒருவரை நாம் அணியில் சேர்த்து இருக்கிறோம். அவர் சிறப்பாக செயல்படுவாரா? மாட்டாரா? என்பதை மறந்து விடுவோம். ஆனால் இந்த முடிவை நான் கேலியதாகதான் பார்க்கிறேன்.



    ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் ஆதில் ரஷீத் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ENGvIND #AdilRashid #MichaelVaughan
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி தேர்வு நாளை நடக்கிறது. முகமதுசமி, ரிஷப்பாண்டுக்கு வாய்ப்பு இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #ENGvIND #INDvENG
    புதுடெல்லி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    ஒருநாள் தொடர் முடிந்த பிறகு இந்தியா- இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 1-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. செப்டம்பர் 11-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது.

    இதில் முதல் 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு நாளை (18-ந்தேதி) அல்லது 19-ந்தேதி நடை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேகப்பந்து வீரர் பும்ரா காயம் காரணமாக 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடரில் ஆடவில்லை. டெஸ்ட் போட்டிக்கு உடல் தகுதி பெறுவது சந்தேகம்.

    இதனால் அவரது இடத்தில் முகமது‌ஷமி இடம் பெறலாம் என்று தெரிகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததால் அவர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார். தற்போது முழு உடல் தகுதியுடன் இருப்பதால் முகமது ‌ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

    டெஸ்ட் அணிக்கு முதல் நிலை விக்கெட் கீப்பரான விர்த்திமான்சகா காயத்தில் உள்ளார். இதனால் வங்காதேசத்துக்கு எதிரான டெஸ்டில் அவர் ஆடவில்லை. தினேஷ்கார்த்திக் அவர் இடத்தில் இடம் பெற்றார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தினேஷ்கார்த்திக் டெஸ்டில் ஆடி இருந்தார்.



    தற்போது அவருடன் மேலும் ஒரு விக்கெட் கீப்பர் அணியில் தேர்வு செய்யப்படலாம். ரிசப் பாண்ட், பார்த்தீவ் பட்டேல், சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும். இதில் ரிசப்பாண்டுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

    இதேபோல சுழற்பந்து வீரர்களில் ஒருவர் தேர்வு பெறலாம். குல்தீப்யாதவ் அல்லது யசுவேந்திர சாஹல் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கலாம். டெஸ்ட் அணியில் அஸ்வின், ஜடேஜா சுழற் பந்தில் முத்திரை பதித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #ENGvIND #INDvENG
    ×