search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாடா அவின்யா"

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அவின்யா எலெக்ட்ரிக் கார் மாடல் ரெண்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த கார் 2025 வாக்கில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய டாடா அவின்யா கான்செப்ட் மாடலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. கான்செப்ட் மாடல் அறிமுகமானது முதல், புதிய அவின்யா மாடலின் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாக துவங்கி விட்டன. புதிய டாடா அவின்யா மாடல் 2025 ஆண்டு தான் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய மாடல் எப்படி இருக்கும் என்ற வாக்கில் பல ரெண்டர்கள் வெளியாகி விட்டன.

    புதிய டாடா அவின்யா எலெக்ட்ரிக் கார் மாடல் ஜென் 3 ஸ்கேட்போர்டு ஆர்கிடெக்ச்சரில் உருவாகி வருகிறது. எலெக்ட்ரிக் வாகன சந்தையில் தொடர் வளர்ச்சியை பதிவு செய்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் 2025 வாக்கில் பத்து புது எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்து இருக்கிறது.

    டாடா அவின்யா

    சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த டாடா ஹேரியர், அல்ட்ரோஸ் மற்றும் டாடா பன்ச் மாடல்களை போன்றே தனது ப்ரோடக்‌ஷன் மாடல் அதன் ரோட்-லீகல் மாடலுக்கு இணையாக உருவாக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. புது எலெக்ட்ரிக் மாடலில் 18 அல்லது 19 இன்ச் வீல்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது இந்திய சாலைகளுக்கு ஏற்ற ஒன்றாக இருக்கும்.

    புதிய டாடா அவின்யா மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என தெரிகிறது. அவின்யா மட்டும் இன்றி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா கர்வ் கூப் போன்ற எஸ்.யு.வி. மாடலை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடலின் ப்ரோடக்‌ஷன் வெர்ஷன் 2024 வாக்கில் வெளியாகும் என தெரிகிறது. 
    ×