search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயலலிதா நினைவிடம்"

    சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு எதிரான வழக்கில் இருந்து நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் விலகியதால் வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. #Jayalalithaa
    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் ரூ.50 கோடி செலவில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக கூறினார். 

    இதனை அடுத்து, வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.
    கடந்த மே மாதம் 23-ம் தேதி கூடிய தமிழக சட்டசபை பெரிய அளவில் பிரச்சனைகள் இன்றி அமைதியாக இன்று முடிவடைந்துள்ளது. #TNAssembly
    சென்னை:

    தமிழக சட்டசபை கடந்த மே மாதம் 23-ம் தேதி கூடியது. அனைத்து துறைகளின் மீதான மானியக்கோரிக்கைகள் இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டன. உறுப்பினரின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.

    33 நாட்கள் நடந்த இந்த கூட்டத்தொடரில் லோக் ஆயுக்தா உள்பட 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தொடர் நிறைவடைந்ததாக அறிவித்த சபாநாயகர், துரை முருகன் அவையை கலகலப்பாக்கினார் என குறிப்பிட்டார். திமுக உறுப்பினர் மஸ்தான் அதிக கேள்விகளை கேட்டுள்ளார்.

    கூட்டத்தொடர் முடிந்ததை அடுத்து, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்ற முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 
    ×