search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜீவன் ரக்‌ஷா விருது"

    • மத்திய அரசின் உள்துறை சாா்பில் 3 பிரிவுகளில் தொடா் விருதுகள் வழங்கப்படுகின்றன.
    • ஜூன் 26 -ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    மத்திய அரசின் உள்துறை சாா்பில் 2023 ம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா தொடா் விருதுகளுக்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :- மத்திய அரசின் உள்துறை சாா்பில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா தொடா் விருதுகள் தைரியமான மற்றும் மனிதாபிமான செயல்களை செய்து உயிா்களைக் காத்த நபா்களுக்கு சா்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக், ஜீவன் ரக்ஷா பதக் ஆகிய 3 பிரிவுகளில் தொடா் விருதுகள் வழங்கப்படுகின்றன.nஇந்த விருதுக்கு உயிரைக் காக்கும் மனிதத் தன்மை மிகுந்த தீரச்செயலான நீரில் மூழ்குதல், விபத்துகள், தீ விபத்துகள், மின்கசிவு, நிலச்சரிவுகள், விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் மீட்பு நடவடிக்கை போன்றவற்றில் இருந்து உயிரைக் காப்பாற்றிய நபா்களுக்கு இந்த தொடா் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

    மேற்குறிப்பிட்டுள்ளபடி தகுதி வாய்ந்த நபா்கள் உரிய ஆவணங்களுடன் திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் படிவம் பெற்று வரும் ஜூன் 26 -ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மிகவும் அபாயகரமான நிலையில் இருந்து மீட்டவர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா விருது வழங்கப்படும்.
    • 6-ந்தேதி மாலை 4 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    மிகவும் அபாயகரமான நிலையில் இருந்து மீட்டவர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா விருது வழங்கப்படும். துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு, அபாய நிலையில் உள்ளவர்களை மீட்டவர்களுக்கு, உத்தம் ஜீவன் ரக்‌ஷா விருது வழங்கப்படும்.தனக்கு காயம் ஏற்பட்டாலும், வீரத்துடன் செயல்பட்டு தாமதமின்றி உயிரை காப்பாற்றியவர்களுக்கு ஜீவன் ரக்‌ஷா விருது வழங்கப்படுகிறது.

    நடப்பு 2022 ஆண்டுக்கான இந்த விருதுக்கு தகுதியானவர்கள் வருகிற 6-ந்தேதி மாலை 4 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் 3 நகல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ×