search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிசாட்7ஏ"

    • தமிழகத்தில் 444 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை (சனிக்கிழமை) பல்வேறு இடங்களில் நடக்கிறது.
    • நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை 7,918 பேர் எழுதுகிறார்கள்.

    நெல்லை:

    தமிழகத்தில் 444 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை (சனிக்கிழமை) பல்வேறு இடங்களில் நடக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை 7,918 பேர் எழுதுகிறார்கள். வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் 800 பேர், அரசு பொறியியல் கல்லூரியில் 800 பேர், தியாகராஜ நகர் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் 1,000 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

    வி.எம். சத்திரம் ரோஸ் மேரி மெட்ரிக்குலேசன் பள்ளியில் 500 பேர், சங்கர்நகர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மெட்ரி க்குலேசன் பள்ளியில் 929 பேர், பாளை ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 1,000 பேர், சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் 600 பேர், கதீட்ரல் மேல்நிலைப் பள்ளியில் 500 பேரும் தேர்வு எழுதுகிறார்கள்.

    பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் பெருமாள்புரம் சாராள் தக்கர் பள்ளியில் 1,000 ேபரும், பெருமாள்புரம் சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 789 பேர் என மொத்தம் நெல்லை மாவட்டத்தில் 7,918 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

    இந்த தேர்வில் கலந்து கொள்பவர்கள் தேர்வு மையத்துக்கு அழைப்பு கடிதம், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஊதா அல்லது கறுமை நிற பந்து முனைப்பேனா ஆகியவற்றை மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    தேர்வு அறைக்கு செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் தொடர்பான எந்த பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

    தேர்வுக்கான ஏற்பாடு களை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் செய்துள்ளனர்.

    விமானப்படை தகவல் தொடர்புக்காக ‘ஜிசாட்-7ஏ’ என்ற செயற்கைகோள் வருகிற 19-ந்தேதி விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள். #GSAT7A #ISRO
    சென்னை:

    இந்திய விமானப்படைக்கு உதவும் வகையில் இஸ்ரோ தயாரித்துள்ள ஜிசாட்-7ஏ செயற்கைகோளை இஸ்ரோ வருகிற 19-ந்தேதி (புதன்கிழமை) விண்ணில் ஏவுவதற்கான பணியில் ஈடுபட்டு உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக 2,250 கிலோ எடையில் ஜிசாட்-7ஏ என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளோம். இதனை அடுத்த வாரம் ‘ஜி.எஸ்.எல்.வி- எப் 11’ ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளோம்.

    ஜிசாட்-7ஏ செயற்கைகோளில் 3.3 கிலோ வாட் திறன் கொண்ட பேட்டரியும், கியூ-பேண்ட் டிரான்ஸ்பாண்டர்களும் பொருத்தப்பட்டு உள்ளன. இதனுடைய ஆயுட்காலம் 8 ஆண்டுகள். இது இஸ்ரோ தயாரித்துள்ள 35-வது தகவல் தொடர்பு செயற்கைகோளாகும். பல்வேறு இடங்களில் உள்ள இந்திய விமானப்படைக்கான ரேடார் நிலையங்களை இந்த செயற்கைகோள் மூலம் இணைக்க முடியும்.



    ஜிசாட்-7ஏ செயற்கைகோள் விமானப்படையின் போர்த்திறன்களை அதிகரிப்பதுடன், உலகளாவிய நடவடிக்கைகளையும் அதிகளவில் தெரிந்துகொள்ள உதவிகரமாக இருக்கும். 2013-ம் ஆண்டு ‘ஜிசாட்-7’ என்ற செயற்கைகோள் கடற்படைக்காக தயாரித்து விண்ணில் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 2-வது முறையாக ‘ஜிசாட்-7ஏ’ செயற்கைகோளை தயாரித்து விமானப்படைக்காக அர்ப்பணிக்க இருக்கிறது.

    இதற்கான ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 7-வது ராக்கெட்டாகும். தகவல் தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் ‘இன்சாட் 4சிஆர்’ செயற்கைகோளின் ஆயுட்காலம் விரைவில் நிறைவடைய இருப்பதால், அதற்கு மாற்றாக ‘ஜிசாட்-31’ என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது பிரெஞ்சு கயானாவில் இருந்து அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும்.

    தொடர்ந்து சந்திரயான் விண்கலமும் அடுத்த மாதம் 3-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 13-ந்தேதிக்குள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது பூமியை 320 ராணுவ செயற்கைகோள்கள் சுற்றிவருகின்றன. அதில் 13 இந்தியாவுக்கு சொந்தமானவை.

    இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.  #GSAT7A #ISRO

    தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் நந்திதா, தற்போது நடித்து வரும் ஒரு படத்தில் கதாநாயகனுக்கு டீச்சராக மாறியிருக்கிறார். #Nandita
    நாய்கள் ஜாக்கிரதை உள்ளிட்ட சில படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த நிசார் சபி ‘7’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஏழு முக்கியக் கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் திரில்லர் கதையான இதில் நந்திதா ஸ்வேதா, ரெஜினா, புஜிதா பொன்னடா, திரிதா சவுத்ரி, ஹரிஷ், அதிதி, ஆர்யா மற்றும் வஞ்சகர் உலகம் படத்தில் நடிக்கும் அனிதா அம்புரோஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.

    இவர்களுடன் நடிகர் ரகுமானும் இணைந்து நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் இந்தப் படத்துக்கு ஆர்.எக்ஸ்.100 படத்துக்கு இசையமைத்த சைத்தன் பரத்வாஜ் இசையமைக்கிறார்.



    கன்னட நடிகையான நந்திதா நன்றாக தமிழ் பேச தெரிந்தவர். இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த ஹரிஸ் என்ற புதுமுகத்துக்கு தமிழ் பேச வரவில்லை. அவருக்கு நந்திதாவே டீச்சராக மாறி தமிழ் கற்று கொடுத்திருக்கிறார்.
    கனடாவில் நடந்து முடிந்த ஜி7 உச்சி மாநாட்டில் கருத்து வேறுபாடு காரணமாக டிரம்ப் வெளியேறி காட்டமாக ட்வீட் செய்ததற்கு, ஜெர்மனி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. #G7 #G7Summit
    முனீச்:

    கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய ஏழு நாடுகளின் ஜி-7 உச்சி மாநாடு கனடா நாட்டில் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமால்பே நகரில் கடந்த 8, 9 தேதிகளில் நடந்தது. 

    உக்ரைனின் ஒரு பகுதியாக விளங்கிய கிரிமியாவை தன்னோடு இணைத்துக்கொண்டதால் இந்த அமைப்பில் இருந்து ரஷியா நீக்கப்பட்டது. ஆனால் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷியா விரும்பியது. இதை டிரம்ப் பேசும்போது வெளிப்படுத்தினார். அப்போது அவர், ரஷியா மீண்டும் இந்த அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

    ஆனால், இதில் ரஷியா பங்கேற்கக்கூடாது என்று பிற உறுப்பு நாடுகள் கருத்து கொண்டு உள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் திட்டவட்டமாக தெரிவித்தார். 

    மேலும், உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது டிரம்ப் இறக்குமதி வரியை விதித்து இருப்பதும் அவருக்கு எதிரான நிலையை பிற நாடுகள் எடுக்க வைத்து விட்டன. டிரம்பின் இந்த முடிவு சட்ட விரோதமானது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவிக்க, கடுப்பான டிரம்ப் கூட்டம் முடிவதற்கு முன்னதாகவே அங்கிருந்து வெளியேறி, சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார்.

    இதனை அடுத்து, அனைத்து தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கூட்டறிக்கை வெளியிட்டனர். விமானத்தில் இருந்த படியே ஜி7 மாநாடு குறித்து காரசாரமாக டிரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்டார். மேலும், ஜி7 கூட்டறிக்கைக்கு தான் அளித்த ஒப்புதலை டிரம்ப் திரும்பப்பெற்றார்.

    மேலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கடுமையான விமர்சனத்தையும் டிரம்ப் முன்வைத்திருந்தார். இந்நிலையில், டிரம்ப் ட்வீட் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜெர்மனி வெளியுறவு மந்திரி ஹெய்கோ மாஸ், “அளவுக்கு அதிகமாக வைத்திருந்த நம்பிக்கையை ஒற்றை ட்வீட் மூலம் குறுகிய நேரத்தில் நீங்கள் உடைத்து விட்டீர்கள். அமெரிக்காவே முதன்மை என்பதற்கு ஐரோப்பிய ஒன்றியமே பதிலாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

    கனடாவில் நடந்து முடிந்த ஜி7 உச்சி மாநாட்டில் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்கா மீது நேரடியாக குற்றம் சாட்ட, கூட்டறிக்கைக்கான தனது ஒப்புதலை டிரம்ப் திரும்பப்பெற்றுள்ளார். #G7 #G7Summit
    டொராண்டோ:

    கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய ஏழு நாடுகளின் ஜி-7 உச்சி மாநாடு கனடா நாட்டில் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமால்பே நகரில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது.

    உக்ரைனின் ஒரு பகுதியாக விளங்கிய கிரிமியாவை தன்னோடு இணைத்துக்கொண்டதால் இந்த அமைப்பில் இருந்து ரஷியா நீக்கப்பட்டது. ஆனால் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷியா விரும்பியது. இதை டிரம்ப் பேசும்போது வெளிப்படுத்தினார். அப்போது அவர், ரஷியா மீண்டும் இந்த அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

    ஆனால், இதில் ரஷியா பங்கேற்கக்கூடாது என்று பிற உறுப்பு நாடுகள் கருத்து கொண்டு உள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் திட்டவட்டமாக தெரிவித்தார். 

    மேலும், உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது டிரம்ப் இறக்குமதி வரியை விதித்து இருப்பதும் அவருக்கு எதிரான நிலையை பிற நாடுகள் எடுக்க வைத்து விட்டன. டிரம்பின் இந்த முடிவு சட்ட விரோதமானது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்தார். 

    இதனை அடுத்து, அனைத்து தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கூட்டறிக்கை வெளியிட்டனர். மாநாடு முடிந்த பின்னர், டிரம்ப் நேரடியாக சிங்கப்பூர் புறப்பட்டார். 12-ம் தேதி வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்-ஐ சந்திக்க உள்ளார். இந்நிலையில், ஜி7 கூட்டறிக்கைக்கு தான் அளித்த ஒப்புதலை டிரம்ப் திரும்பப்பெற்றுள்ளார்.

    மேலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கடுமையான விமர்சனத்தையும் டிரம்ப் முன்வைத்துள்ளார். “ஜி7 மாநாட்டில் ஜஸ்டின் சாந்தமானவர் போல நடித்துள்ளார். வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்கா ஏமாற்றுவதாக அவர் கூறியுள்ளார். ஆனால், நிஜத்தில் அமெரிக்க பொருட்களுக்கு கனடா அதிக வரி விதித்து அமெரிக்க விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை பாதிக்கிறது” என டிரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
    ×