search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேவூர்"

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    அவினாசி :

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :- சேவூர் மற்றும் வடுகபாளையம் துணைமின்நிலையங்களில் வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை சேவூர், அசநல்லிபாளையம், பந்தம்பாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைபுதூர், பாப்பான்குளம், வாலியூர், தண்ணீர்பந்தல் பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சைத்தாமரைக்குளம், சாவககாட்டுப்பாளையம், சாலைப்பாளையம், நடுவச்சேரி, கருக்கன்காட்டுப்புதூர், தளிஞ்சிபாளையம், மாரப்பம்பாளையம், வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சைத்தாமரைக்குளம், பிச்சாண்டம்பாளையம், ஒட்டப்பாளையம், ஓலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்–படும். இவ்–வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 1.61 கோடி ரூபாய் கொள்முதல் விலையாக வழங்கப்பட்டுள்ளது.
    • 15 ஆயிரத்து 500 டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    அவிநாசி :

    சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் முதன்முறையாக கொப்பரை கொள்முதல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 148 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு 1.61 கோடி ரூபாய் கொள்முதல் விலையாக வழங்கப்பட்டுள்ளது.

    ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் தற்போது நாபெட் வாயிலாக கொப்பரை கொள்முதல் நடந்துவருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், பொங்கலூர், பெதப்பம்பட்டி, அலங்கியம், மூலனூர், உடுமலை என 6 மையங்களில் கொப்பரை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டு மொத்தம் 15 ஆயிரத்து 500 டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.இதில் அவிநாசி, குன்னத்தூர் சுற்றுவட்டார விவசாயி கள் பயன்பெறும் வகையில் அவிநாசி, சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை கொள்முதல் அனுமதிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அடிப்படையில் அங்கு 1,000 மெட்ரிக்., டன் அளவுக்கு கொப்பரை கொள்முதல் செய்ய மார்க்கெட்டிங் கமிட்டி அனுமதி வழங்கியது. இதையடுத்து அங்கும் கொப்பரை கொள்முதல் நடந்து வருகிறது.கண்காணி ப்பாளர் சந்திரமோகன் கூறுகையில், கொப்பரை கொள்முதலில்160 விவசாயிகள்பதிவு செய்துள்ளனர். இதுவரை 106 விவசாயிகளிடம் இருந்து 2,965 மூட்டையில் 148 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    நாபெட் கொள்முதல் விலை அடிப்படையில் 1.61 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தேவையான குடோன் வசதி இருப்பதால் விவசாயிகள் கொப்பரைக்கு அரசின் கொள்முதல் விலை பெறலாம் என்றார்.

    • திட்டப்பணியில் கையாடல் செய்து விட்டதாக, சேவூரைச் சேர்ந்த மனோன்மணி என்பவர் குற்றம் சாட்டினார்.
    • கார் தெரிவிக்கப்பட்ட திட்டப்பணி முழுவதும் இணையவழியில் கணக்கீடு செய்யப்படுவது.

    அனுப்பர்பாளையம் :

    அவிநாசி ஒன்றியம் சேவூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவராக சேவூர் ஜி.வேலுசாமியும், 12 வார்டு உறுப்பினர்களும் உள்ளனர். இந்நிலையில் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கே.எம்.சுப்பிரமணி தலைமை வகித்தார். இதில் கடந்த (ஆக.15)கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் சேவூர் ஜி.வேலுசாமி, திட்டப்பணியில் கையாடல் செய்து விட்டதாக, சேவூரைச் சேர்ந்த மனோன்மணி என்பவர் குற்றம் சாட்டினார். இதற்கு ஊராட்சி மன்றத்தலைவர் சேவூர் ஜி.வேலுசாமி கூறுகையில், புகாரை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து ஊராட்சி மன்றத்தலைவர், நிர்வாகத்தின் மீது அவதூறு பரப்பி வருகிறார்கள்.இந்த நிலை மீண்டும் தொடர்ந்தால், அவதூறு வழக்குத் தொடருவது என கூட்டத்தில் உறுப்பினர்கள் முடிவு செய்தனர். இது குறித்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமாரிடம் கேட்ட போது, புகார் தெரிவிக்கப்பட்ட திட்டப்பணி முழுவதும் இணையவழியில் கணக்கீடு செய்யப்படுவது. ஊராட்சி மன்றத்தலைவர் பதவி ஏற்பதற்கு முன்பாக தொடங்கப்பட்ட பணி. ஊராட்சி மன்றத்தலைவருக்கும், இப்பணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றார்.

    • முதல் நிலையாக போர்க்களக் காட்சி அமைந்துள்ளது.
    • வீரன் வலது கையில் வாளும் இடதுகையில் கேடயமும் வைத்துள்ளான்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சேவூரில் புளியம்பட்டி சாலையோரம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அப்போது பெய்த மழை காரணமாக மண்ணில் புதைந்திருந்த நடுகல்லின் ஒரு பகுதி வெளியே தெரிய ஆரம்பித்தது. இது பற்றி தகவல் அறிந்து வந்த தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் முடியரசு இந்த நடுகல்லைச்சுத்தம் செய்து ஆய்வு செய்தார்.

    இந்த நடுகல் குறித்து முடியரசு கூறியதாவது:-

    இது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால வகையான அடுக்கு நிலை நடுகல் மற்றும் சதிக்கல் ஆகும். முதல் நிலையாக போர்க்களக் காட்சி அமைந்துள்ளது. வீரன் வலது கையில் வாளும் இடதுகையில் கேடயமும் வைத்துள்ளான். வீரன் எதிர்கொள்ளும் மற்றொரு வீரனை அடையாளம் காண முடியாத அளவுக்கு சிற்பம் சிதைவுபட்டுள்ளது. யாரை எதிர்கொள்கிறான் என்பது இதனால் தெரியவில்லை.

    இப்போரில் அவன் இறந்துவிட்டதால் அவனது இரு மனைவியரும் சிதையில் விழுந்து உயிர் துறந்துள்ளனர். அடுத்த நிலை தேவ கன்னியர் இருவர் வலது இடது புறங்களில் சூழ இறந்துபட்ட வீரனையும் அவனது இரு மனைவியரையும் வானுலகம் அழைத்துச் செல்லுதல் ஆகும். தேவ கன்னியரின் கரத்தில் சாமரம் வீசுவது போல் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

    மூன்றாவது நிலையில் வீரனும் இரு மனைவியரும் சிவலோகப் பதவி அடைகின்றனர். நந்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இறுதி நிலையாக வீரன் சிவலிங்கத்திற்கு மாலை அணிவித்து சிவபதம் சேர்தல் ஆகும். இவ்வீரன் இப்பகுதியைச் சேர்ந்த சிற்றரசனாகவோ அல்லது தளபதியாகவோ இருந்திருக்க வேண்டும். வீரன் மற்றும் அவனது மனைவியரின் ஆடை அணிகலன்களை கொண்டு நோக்கும் போது இது புலப்படுகிறது. இக்கல் 6 அடி உயரமும் 4 அடி அகலமும் 5 இஞ்ச் கனமுள்ள பலகைக்கல் ஆகும். இவ்வாறு தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் முடியரசு தெரிவித்திருந்தார். இது அடுக்கு நிலை நடுகல் மற்றும் சதிக்கல் என உறுதிப்படுத்தினார்.

    இக்கல்லை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் நிலவருவாய் ஆய்வாளர் அன்றைய தினமே பாதுகாப்பாக சேவூர் கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் வளாகத்தில் வைத்தார். மேலும் அன்றைய அகழ்வாய்ப்பக அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் உத்தரவு தந்தவுடன் அகழ்வாய்ப்பகத்திற்கு எடுத்து செல்லப்படும் என்று அகழ்வாய்ப்பக அதிகாரி தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது வரை இந்த சதிக்கலை எடுத்து செல்லவில்லை.

    ×