search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் ஜங்சன் ரெயில் நிலையம்"

    • 5-வது பிளாட்பார்மில் ரெயில் வரும் என்று ரெயில்வே போர்டில் அறிவித்த நிலையில் திடீரென ரெயில் 3-வது பிளாட்பார்முக்கு வந்தது.
    • 3 நிமிடம் மட்டுமே ரெயில் நின்று விட்டு புறப்பட்டு சென்றதால் பெண்கள் குழந்தைகளால் ஓடி வர முடியாமல் தவிப்புக்குள்ளாகினர்.

    சேலம்:

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் வழியாக தினசரி ஆலப்புழா-தன்பாத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வழக்கமாக சேலம் ரெயில் நிலையத்திற்கு பிற்பகல் 3 மணிக்கு வந்து 3 நிமிடங்கள் நின்று செல்லும். நேற்று இந்த ரெயிலில் பயணம் செய்ய 100-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர்.

    5-வது பிளாட்பார்மில் ரெயில் வரும் என்று ரெயில்வே போர்டில் அறிவித்த நிலையில் திடீரென ரெயில் 3-வது பிளாட்பார்முக்கு வந்தது. இதனை பார்த்த வாலிபர்கள் தண்டவாளத்தில் ஓடி சென்று தன்பாத் ரெயிலில் ஏறினர். 3 நிமிடம் மட்டுமே ரெயில் நின்று விட்டு புறப்பட்டு சென்றதால் பெண்கள் குழந்தைகளால் ஓடி வர முடியாமல் தவிப்புக்குள்ளாகினர்.

    இதையடுத்து ரெயில் பயணிகள் ஸ்டேசன் மாஸ்டர் அறைக்கு சென்று ரெயிலை ஏன் மாற்றி இயக்கினீர்கள் என்று கேட்டனர். அதற்கு முறையாக பதில் செல்லாத அதிகாரிகள் அங்கிருந்து அவர்களை விரட்டி விட்டனர். தொடர்ந்து அறிவிப்பு அலுவலகத்தில் இருந்தவர்களை பயணிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பயணிகளை சமாதானப்படுத்திய அதிகாரிகள் திடீர் அறிவிப்பால் ரெயில் தண்டவாளம் மாறி வந்ததாக தெரிவித்தனர். பின்னர் சென்னை செல்ல இருந்த பயணிகளை கோவை ரெயிலிலும், வடமாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் ரப்திசாகர் எக்ஸ்பிரசிலும் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சேலம் ரெயில் நிலையத்தல் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ×