search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஸ் ஒலிம்பியாட் டீசர்"

    • செஸ் ஒலிம்பியாட் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
    • போட்டியில் 187 நாடுகளை சார்ந்த வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    மாமல்லபுரம்:

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44- வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான பணிகளை மாநில விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் இன்று ஆய்வு செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:-

    தமிழக முதலமைச்சர் 44- வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, தமிழ்நாட்டில் சிறப்பாக நடத்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார். போட்டி நடைபெறவுள்ள பூஞ்சேரிக்கு கடந்த 12-. ந்தேதி நேரடியாக வருகை தந்து ஆய்வு மேற்கொண்டு போட்டி சிறப்பாக நடைபெற அனைத்து ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்கள்.

    இன்று போட்டி நடைபெறவுள்ள இடத்தில் உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். செஸ் போட்டி நடைபெறவுள்ள இடத்தில் 22 ஆயிரம் சதுர அடியில் உள்ள அரங்கம் 1-ல் 196 செஸ் டேபிள் , போர்டுகளும், உலகத்தரம் வாய்ந்த வகையில் 52-ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டு வருகின்ற பிரமாண்ட அரங்கம் 2- ல் 512 செஸ் டேபிள் , போர்டுகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

    அரங்கம் 1- ல் 49 அணிகளும், அரங்கம் 2- ல் 128- அணிகளும் விளையாடுகின்றன. ஏறத்தாழ ஒரு நாளைக்கு 177 அணிகள் விளையாடுகின்ற இப்போட்டியில் 187 நாடுகளை சார்ந்த வீரர் - வீராங்கனைகள் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு அரங்கத்தில் தரைதளம், மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 80 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன. 

    போட்டியில் பங்கேற்க வருகை தரவுள்ள வீரர்கள், நடுவர்கள், விருந்தினர்கள் அனைவரையும் தமிழர் பண்பாடு, கலாச்சாரம், விருந்தோம்பல் படி தழிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் வருக, வருக என வரவேற்க காத்திருக்கிறோம்.

    நேற்று செஸ் போட்டிக்கான டீசர் மரியாதைக்குரிய நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார் . நம் முதல்வர் பங்கேற்றள்ள இந்த டீசர் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×