search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை வானிலை மையம்"

    • செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என ஏற்கனவே அறிவித்திருந்தது.

    தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரம் வரை (காலை 10 மணி வரை) செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்கிளலம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடம். நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • திருநெல்வேலி மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று இரவு முதல் மிதமான மழை.
    • இன்று காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்.

    தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

    நேற்று முன்தினம் கோவை, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு சில இடங்களில கனமழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. நேற்று நீலகிரி, ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    திருநெல்வேலி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
    • திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்கள் (நேற்று மற்றும் இன்று) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் வேலூரில் நேற்று இரவில் இருந்து விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக, அம்மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேவேளையில் 6-ம் வகுப்பில் இருந்து பள்ளிகள் வழக்கும்போல் இயங்கும் என்றும், கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்கும் என்றார்.

    இதற்கிடையே இன்று கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, திருச்சி, தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிவித்துள்ளார்.

    சென்னையில் இன்று காலை சில இடங்களில் மழை பெய்தது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் காலை 10 மணி வர இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

    தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என வானிமை மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல், இந்திய பெருங்கடல் பகுதி வரை வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி பரவி உள்ளது.

    இதன் காரணமாக இந்திய பெருங்கடல் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. அது மேற்கு நோக்கி நகர்ந்து வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இது தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நீடிக்கும். கடலோர பகுதி தவிர உள் மாவட்டங்களில் மூடுபனி நிலவும். நீலகிரி, கொடைக்கானல் மலைப்பகுதியில் உறைபனியும் நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அடுத்த 2 நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகப்பட்சம் 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×