search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை தீவுத்திடல்"

    • டீ தூளில் கலப்படத்தை எளிதாக கண்டறிவது எப்படி என்று அதிகாரிகள் விளக்கி காண்பித்தனர்.
    • சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் மாநில அரசின் 34 அரங்குகள், பொதுத்துறை நிறுவனங்களின் 15 அரங்குகள், மத்திய அரசின் 2 அரங்குகள் என 51 அரங்குகள் உள்ளன.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான 48-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்து பார்வையிட்டார்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரங்கை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முழு உடல் பரிசோதனை குறித்து கேட்டறிந்துவிட்டு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஸ்டாலுக்கு சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த முடவாட்டுக்கால் கிழங்கு சூப்பை அருந்தினார். அதைத்தொடர்ந்து பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு முறை, முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட ஸ்டால்களை பார்வையிட்டார்.

    அதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறை ஸ்டாலிற்கு வந்தபோது, உணவு பொருட்களில் கலப்படம் செய்யப்படுவது குறித்து அதிகாரிகள் எடுத்து உரைத்தனர். அப்போது, டீ தூளில் கலப்படத்தை எளிதாக கண்டறிவது எப்படி என்று அதிகாரிகள் விளக்கி காண்பித்தனர்.

    பின்னர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரங்கை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டு இருந்த மாதிரி கூடைப்பந்து அரங்கில் பந்தை எடுத்து போட்டார். அதைத்தொடர்ந்து பாக்ஸிங் மாதிரி அரங்கில் விளையாட்டு வீரர்கள் விளையாடியதை பார்வையிட்டார். இறுதியாக இ-ஸ்போர்ட்ஸ் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இந்த நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன், சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மற்றும் சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பொது மேலாளர் ஐ.கமலா மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இந்த சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் மாநில அரசின் 34 அரங்குகள், பொதுத்துறை நிறுவனங்களின் 15 அரங்குகள், மத்திய அரசின் 2 அரங்குகள் என 51 அரங்குகள் உள்ளன. இவை தவிர, 110 சிறிய கடைகள் மற்றும் 30 தனியார் அரங்குகளும் உள்ளன. மேலும் பல்வேறு வகையான ராட்டினங்கள் உள்ளிட்ட சுமார் 30 வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. மேலும் லண்டன் மற்றும் துபாய் நாட்டை சேர்ந்த வல்லுனர்களின் உதவியுடன் சொகுசு கப்பல் மற்றும் வானூர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பொருட்காட்சியானது 70 நாட்களுக்கு நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையும், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையும் திறந்து இருக்கும். பெரியவர்களுக்கு ரூ.40, 6 முதல் 12 வயது வரை ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மாணவ-மாணவிகளுக்கு சலுகை கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்படுகிறது. 6 வயதுக்கு குறைவானவர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. இந்த ஆண்டு கண்காட்சிக்கு 12 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்த ஆண்டுக்கான 47-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி வருகிற 3-ம் தேதி தொடங்க உள்ளதாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்து உள்ளது.
    • 47-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில், ராட்டினங்கள், பொருட்கள் வாங்கும் கடைகள், உணவகங்கள் என ஏராளம் இடம்பெற உள்ளன.

    சென்னை:

    சென்னை தீவுத்திடல் சுற்றுலா- தொழில் பொருட்காட்சி வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது.

    சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் சுற்றுலா- தொழில் பொருட்காட்சி நடைபெறும். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீவுத்திடல் பொருட்காட்சி நடைபெறவில்லை.

    இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான 47-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி வருகிற 3-ம் தேதி தொடங்க உள்ளதாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்து உள்ளது. இந்த 47-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில், ராட்டினங்கள், பொருட்கள் வாங்கும் கடைகள், உணவகங்கள் என ஏராளம் இடம்பெற உள்ளன.

    மேலும் தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளா்ச்சிப் பணிகளை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் அரசு துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது இதன் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி வருகிற 3-ந்தேதி தொடங்கப்பட்டு 70 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருட்காட்சி நடத்தப்படும் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்து உள்ளது.

    • பொருட்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ராட்டினங்கள், பொருட்கள் வாங்குவதற்கு உரிய கடைகள், தின்பண்டங்கள், ஓட்டல்கள் ஏராளம் இடம் பெறுகின்றன.
    • 70 நாட்கள் பொருட்காட்சியை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த பொருட்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ராட்டினங்கள், பொருட்கள் வாங்குவதற்கு உரிய கடைகள், தின்பண்டங்கள், ஓட்டல்கள் ஏராளம் இடம் பெறுகின்றன.

    இது தவிர அரசுத்துறை அரங்கங்கள், மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல் விளக்க அரங்கங்கள், மத்திய அரசின் நிறுவனங்கள், எரிசக்தி துறை அரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் இடம் பெறுகிறது.

    அரசின் புதிய திட்டங்கள் வளர்ச்சி பணிகளை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்படுகிறது.

    இந்த பொருட்காட்சியில் மக்களை கவரும் வகையில் குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு பிடித்த பல்வேறு விளையாட்டு அம்சங்களும் இதில் இடம் பெறுகிறது. பனி உலகம், கடல்வாழ் மீன் அருங்காட்சியகம் ஆகியவையும் இடம் பெறுகின்றன.

    70 நாட்கள் பொருட்காட்சியை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பொருட்காட்சியை நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினார்கள்.

    • இந்திய நாட்டிய திருவிழா மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகம் மற்றும் தீவுத் திடல் ஆகிய இடங்களில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்திய நாட்டிய திருவிழா நிகழ்ச்சிகள் முழுவதையும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சமூக வலைதளங்களின் மூலம் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் உள்ள சுற்றுலா வளர்ச்சி கழகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு இந்திய நாட்டிய திருவிழா மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகம் மற்றும் தீவுத் திடல் ஆகிய இடங்களில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. ஜனவரி 12-ந் தேதி இந்த விழா முடிகிறது. பரதநாட்டியம், மோகினியாட்டம், மணிப்பூரி, ஒடிசி, குச்சிப்புடி, கரகம், காவடி, தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்பட பல்வேறு நடனங்கள், கிளாரினெட், சாக்ஸபோன், நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகளின் இசையுடன் இணைந்து 63-க்கும் மேற்பட்ட குழுக்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இந்திய நாட்டிய திருவிழா நிகழ்ச்சிகள் முழுவதையும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சமூக வலைதளங்களின் மூலம் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொருட்காட்சியின் நுழைவுவாயில் தமிழக பண்பாடு, கலாச்சாரத்தை நிலைநிறுத்தும் வகையில் அமைக்கப்படும்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்து விழாவை நடத்த சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா தொழில் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

    கடைசியாக 2019-ம் ஆண்டு பொருட்காட்சி நடந்தது. கொரோனா தொற்று பாதிப்பால் 2 ஆண்டுகளாக பொருட்காட்சி நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு சுற்றுலா பொருட்காட்சியை நடத்த சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அனைத்து முன் ஏற்பாடுகளையும் இப்போதே தொடங்கி விட்டது. 60 நாட்கள் இப்பொருட்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. வருகிற 30-ந்தேதி டெண்டர் திறக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து பொருட்காட்சிக்கான மற்ற பணிகள் தொடங்கும்.

    மத்திய, மாநில அரசு துறை அரங்குகள், நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன. 2 வருடத்திற்கு பிறகு தீவுத்திடலில் பொருட்காட்சி நடைபெறுவதால் பல்வேறு சிறப்புகளுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    பொருட்காட்சியின் நுழைவுவாயில் தமிழக பண்பாடு, கலாச்சாரத்தை நிலைநிறுத்தும் வகையில் அமைக்கப்படும். நுழைவு வாசலுக்கான அனுமதி முதலமைச்சரிடம் இருந்து பெறப்படுகிறது. கலைநயத்துடன் அமையப்பெறும் நுழைவு பகுதி அனைவரையும் கவரும் வகையில் இடம் பெற வேண்டும் என்பதில் சுற்றுலாத்துறை உறுதியாக உள்ளது.

    பொருட்காட்சியில் வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறுவர்களை கவரும் வகையில் மேலும் பல புதிய விளையாட்டு சாதனங்களை அமைக்கவும் ஆலோசிக்கப்படுகிறது. ராட்சத ராட்டினங்கள், சிறுவர் ரெயில் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் நிறைய இடம்பெற உள்ளன.

    தமிழக அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த அரங்குகள் அதிகளவில் இடம் பெறுகின்றன. கடந்த 18 மாதங்களில் அரசு செயல்படுத்திய சிறப்பு திட்டங்கள் பொதுமக்க ளுக்கு தெரியும் வகையில் அரசின் அரங்குகள் இடம் பெற உள்ளன.

    சுற்றுலா பொருட்காட்சி இந்த ஆண்டு தாமதம் இல்லாமல் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை மற்றும் அரையாண்டு விடுமுறை நாட்களில் தொடங்கப்படுகிறது.

    அதாவது டிசம்பர் 25-ந் தேதி முதல் 30-ந் தேதிக்குள் பொருட்காட்சியை தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்து விழாவை நடத்தவும் சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.

    டெண்டர் இறுதி செய்யப்பட்டவுடன் அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கும். டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து தீவுத்திடலை சமன்படுத்தும் பணி, நடைபெறும் என்று அத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • சென்னை தீவுத்திடலில் தீபாவளிக்காக 47 சிறப்பு பட்டாசு விற்பனை கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • பட்டாசு வாங்க வருபவர்கள் டெபிட்கார்டு, கிரெடிட்கார்டு, 'கூகுள்பே' உள்பட ஆன்லைன் மூலமும் பணம் செலுத்தலாம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பட்டாசு, புத்தாடை வாங்க கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பட்டாசு கடை அமைக்க தீயணைப்பு துறையில் அனுமதி பெற வேண்டும். இந்த ஆண்டு சென்னை மாவட்டத்தில் 800 விண்ணப்பங்கள் தீயணைப்பு துறைக்கு வந்துள்ளன.

    தனியார் இடங்களில் பட்டாசு கடை வைக்க சொத்து வரி கட்டிய ரசீது அவசியம் தேவை. அது உள்பட 30 விதிகளை பின்பற்றி பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. பட்டாசு கடைகள் அமைக்கும் இடத்திற்கு தீயணைப்பு துறையினர் நேரில் சென்று பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா? என ஆய்வு செய்த பிறகே அனுமதி வழங்கி வருகிறார்கள்.

    சென்னை மாவட்டத்தில் நேற்று வரை 600 விண்ணப்பங்களுக்கு பட்டாசு கடை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை தீவுத்திடலில் தீபாவளிக்காக 47 சிறப்பு பட்டாசு விற்பனை கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தீவுத்திடலில் சிவகாசியில் உள்ள 20 முன்னணி நிறுவனங்கள் "ஸ்டால்" அமைத்து உள்ளன.

    தீபாவளிக்காக 21-ந் தேதிக்குள் முன்கூட்டியே வந்து பட்டாசு வாங்க வருபவர்களுக்கு 25 சதவீத தள்ளுபடியில் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

    இந்த பட்டாசு விற்பனையை அமைச்சர்கள் சேகர்பாபு, மதிவேந்தன் மற்றும் விக்கிரமராஜா ஆகியோர் இன்று தொடங்கி வைக்கிறார்கள்.

    தீவுத்திடலில் சிறப்பு பட்டாசு விற்பனையை முன்னிட்டு கண்காணிப்பு கேமரா, உணவகங்கள், கார் பார்க்கிங் வசதி போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    பட்டாசு வாங்க வருபவர்கள் டெபிட்கார்டு, கிரெடிட்கார்டு, 'கூகுள்பே' உள்பட ஆன்லைன் மூலமும் பணம் செலுத்தலாம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தீவுத்திடலில் எந்த கடையில் பட்டாசு வாங்கினாலும் ஒரே விலையில்தான் கிடைக்கும் என்றும் வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

    பட்டாசு கடை இன்று முதல் திறக்கப்பட்டு உள்ளதால் தீவுத்திடலில் தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • உணவு திருவிழாவில் புதிதாக பீப் பிரியாணிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • பீப் பிரியாணி கடைகளுக்கு இன்று மாலை நேரில் செல்ல அமைச்சர் மா.சுப்பிரணியன் முடிவு செய்துள்ளார்.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் 3 நாள் உணவு திருவிழா நேற்று தொடங்கி உள்ளது. இதில் பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய உணவுகள், 65 விதமான தோசை வகைகள் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது. மீன் உணவுகள், நெல்லை இருட்டுக்கடை அல்வா போன்றவையும் உணவு திருவிழாவில் கிடைக்கின்றன.

    இந்த உணவு திருவிழாவை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர். உணவு திருவிழாவுக்கு சென்று பல்வேறு வகையான உணவு வகைகளையும் மக்கள் ருசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் உணவு திருவிழாவில் புதிதாக பீப் பிரியாணிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த தகவலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, உணவு திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணிக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. இதற்காக 3 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன என்று கூறினார்.

    இந்த பீப் பிரியாணி கடைகளுக்கு இன்று மாலை நேரில் செல்ல அமைச்சர் மா.சுப்பிரணியன் முடிவு செய்துள்ளார். இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் உணவு திருவிழாவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று கடை வைத்திருப்பவர்கள் தெரிவித்தனர்.

    ஞாயிற்றுக்கிழமையான நாளை அதிகளவில் மக்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நாளை உணவுத்திருவிழா நடத்தப்படுகிறது.
    • பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நாளை உணவுத்திருவிழா நடத்தப்படுகிறது.

    3 நாட்கள் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

    உணவு வீணாகுவதை தடுக்க வேண்டிய வழிமுறைகள், எந்த வகை உணவுகளை சாப்பிடுவது நல்லது என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் இங்கு எடுத்துரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலைநிகழ்ச்சிகளும் இங்கு நடைபெற உள்ளது. 14-ந்தேதி காலை 7 மணியளவில் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நடத்தப்படுகிறது.

    இந்த உணவு திருவிழாவில் திரைக்கலைஞர்கள், பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×