search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செண்பகவள்ளி அம்மன்"

    • செண்பகவள்ளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பேரூராட்சி கவுன்சிலர் ரேகா ராமசந்திரன் சுதாரம் மற்றும் குடிநீர் வசதி செய்திருந்தார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழ வந்தான் மேலரதவீதி, கிண்ணி மடத்தெருவில் குருநாதர் அருளானந்த சுவாமிகள் மடலாய வளாகத்தில் அமைந்துள்ள செண்பகவள்ளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

    விழாவை முன்னிட்டு கடந்த 6-ந் தேதி மாலை பிரசாத் சர்மா, தியாகராஜ தீட்ஷிதர், பட்டாச்சாரியார்கள் குழுவினர் விக்னேஷ்வரா பூஜையுடன் யாகசாலை பூஜைகள் முடிந்து நேற்று காலை யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய குடங்களுடன் கடம் புறப்பாடாகி மங்கள வாத்தியங்கள் முழுங்க புனித தீர்த்தங்கள் கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது வானில் கருட பகவான் வட்டமிட்டது.

    இதையடுத்து அம்மனுக்கு 18 வகையான வாசனை திரவியம் கொண்டு அபிஷேகம் செய்தனர். பின்னர் மலர் அலங்காரம் செய்து அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர் மற்றும் செண்பகம் பிள்ளை, முத்து பிள்ளை வகையறா பங்காளிகள் செய்திருந்தனர். பேரூராட்சி கவுன்சிலர் ரேகா ராமசந்திரன் சுதாரம் மற்றும் குடிநீர் வசதி செய்திருந்தார். பாதுகாப்பு பணியில் சோழவந்தான் போலீசார் ஈடுபட்டனர்.

    ×