search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செண்டை மேளம்"

    • ஆண் பக்தர்கள் செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாடிட்டா சுருவத்துடன் ஊர்வலமாக சென்றனர்.
    • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக கொண்டனர்.

    தரங்கம்பாடி :

    தரங்கம்பாடி தாலுக்கா, பொறையாறில் ராஜம்பாள் தெருவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 22-ம் ஆண்டு தேர்பவனி மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.

    கொடி ஊர்வலம் புறப்பட்டபோது சந்தனகுடம், குதிரை வண்டியில் கொடி ஊர்வலம் அதனை தொடர்ந்து மிக்கல் ஆண்டவர், தேவமாதா குழந்தை ஏசு செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆகிய சுருவங்கள் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்டு பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நாதஸ்வரம், பேண்டு வாத்தியம், கேரளா செண்டை மேளம் முழங்க நாட்டிய குதிரைகளுடன் விமர்சையாக ஊர்வலம் புறப்பட்டது.

    அப்போது பக்தர்கள் மாலை அணிந்து 60 நாட்கள் விரதம் இருந்து சிகப்பு உடை அணிந்து தங்களது நேர்த்திக்கடன் நிறைவு செய்யும் வகையில் பெண்கள் புடவை பழவகைகள், இனிப்பு வகைகள், வளையல்கள், தென்னை கன்று உள்ளிட்ட பொருட்களுடன் சீர்வரிசை எடுத்து முன் வரிசையில் செல்ல பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி வர ஆண் பக்தர்கள் செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாடிட்டா சுருவத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

    அதை தொடர்ந்து பல்வேறு தெரு வழியாக ஊர்வலமாக சென்று ஆலயத்தை வந்து அடைந்ததும் ஆலய நிர்வாகி மைக்கேல்ராஜ் முன்னிலையில் கொடி ஏற்கப்பட்டது. பக்தர்களுக்கு கஞ்சி வழங்கினர். இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிர க்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.

    ×