search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவரில்"

    • செல்போன்களை திரும்ப வழங்கக்கோரி திருச்சி மத்திய சிறை முகாமில் கைதிகள் சுவரில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • நாங்கள் முகாம் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு எங்கள் மீதான வழக்குகள் அனைத்தும் இப்போது முடிவுற்ற நிலையில் வரும் 12-ந்தேதி 23 பேர் இலங்கை செல்ல இருக்கிறோம் என்றனர்

    திருச்சி:

    திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டினருக்கான முகாம் சிறை உள்ளது. இங்கு150-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கைதிகள் பல்வேறு வழக்குகளில் கைதாகி அடைக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 155 ெசல்போன், 3 லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் அனைத்தும் திரும்ப வழங்க வேண்டும் என்று முகாம் சிறைவாசிகள் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சி

    ல நாட்களுக்கு முன்பு கைதிகள் சிலர் அங்குள்ள மரங்களில் ஏறி தற்கொலை மிரட்டல்கள் விடுத்தனர். அத்துடன் அதிக மாத்திைரகளை உட்கொண்டு மயக்கமும் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் முகாம் சிறை வாசல் பகுதி சுவற்றில் 23 கைதிகள் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் முகாம் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு எங்கள் மீதான வழக்குகள் அனைத்தும் இப்போது முடிவுற்ற நிலையில் வரும் 12-ந்தேதி 23 பேர் இலங்கை செல்ல இருக்கிறோம்.

    எங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் அனை்தையும் நாங்கள் சிறையில் இருந்து வெளியே செல்லும் போது ஒப்படைக்க வேண்டும்.

    இது குறித்து காவல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்த போது ஒப்படைக்க முடியாது என்று கூறுகின்றனர். நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிய செல்போனை எங்களிடம் மீண்டும் ஒப்படைப்பதில் போலீசார்களுக்கு என்ன சிக்கல் இருக்கிறது.

    சட்ட விதிப்படி எங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை போலீசார் ஒப்படைக்க வேண்டும். ஏனெனில் நாங்கள் இலங்கை செல்லும் போது அங்கு விமான நிலையத்தில் எங்களை அந்நாட்டு போலீசார் கைது செய்வார்கள்.

    அப்போது எங்களை ஜாமீனில் எடுக்க எங்களது குடும்பத்தினர்கக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்காக தான் நாங்கள் அனைவரும் போராடுகின்றோம் என்றனர்.

    இதை கேட்டதும் அங்கு பாதுகாப் பணியில் இருந்த உதவி கமிஷனர் காமராஜ் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க செய்தார்.

    இந்த சம்பவத்தால் மத்திய சிறை வளாகத்தில் நேற்று இரவு 10 மணி முதல் 11 மணி வரை பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×