search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுச்சுவரை தாண்டி குதித்த கரடிகள்"

    • 2 கரடிகள் ஒன்று இந்த பகுதியில் வெகுநேரமாக சுற்றி திரிந்தது.
    • வனத்து–றையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை சூறையாடுவது என தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக கோத்தகிரி பகுதிகளில் கரடிகளின் நடமாட்டமும், அதன் அட்டகாசமும் அதிகமாகவே காணப்படுகிறது.

    கோத்தகிரி பெரியார் நகர் தவிட்டுமேடு அடுத்த அரவேணு காந்தி சிலை அருகே கோத்தகிரி-காமராஜர் சதுக்கத்தை இணைக்க கூடிய சாலை செல்கிறது. இந்த சாலையில் ஏராளமான வீடுகளும் உள்ளன.

    இந்த நிலையில் நேற்றிரவு வனத்தை விட்டு வெளியேறிய 2 கரடிகள் ஒன்று இந்த பகுதியில் வெகுநேரமாக சுற்றி திரிந்தது. திடீரென அங்குள்ள ஒரு வீட்டின் அருகே சென்றது. பின்னர் அந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி வீட்டின் வளாகத்திற்குள் புகுந்தது.

    வளாகத்தில் புகுந்த கரடிகள் அங்கு சிறிது நேரம் சுற்றி திரிந்து விட்டு, பின்னர் மீண்டு சுற்றுச்சுவரை தாண்டி வனத்தை நோக்கி சென்றது.

    இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. இதை பார்த்த வீட்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாகவே கரடிகள், சிறுத்தைகள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து–ள்ளது. எனவே இங்கு வனவி லங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படு த்த வனத்து–றையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×