search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுய் தாகா"

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ஷர்மா, சுய் தாகா படத்தில் நடித்தது கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது என்று கூறியிருக்கிறார். #Anushka
    வருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் ‘சுய் தாகா’. 2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது. மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார். மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.

    வருண் தவான் இந்த படத்தில் மௌஜி என்ற கதாபாத்திர பெயரில் நடித்துள்ளார். சைக்கிள் என்பது சிறிய கிராமங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனம். வருண் கதாபாத்திரத்திற்கு இந்த சைக்கிளை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் சரத் கட்டார்யா.

    "மௌஜி சைக்கிளை பெரும் அளவில் விரும்புவான். எங்கு சென்றாலும் சைக்கிளை பயன்படுத்துவான். கிராமப்புற பகுதிகளுக்கு சைக்கிள் எளிமையான வாகனம். சைக்கிளில் நானும் அனுஷ்காவும் பயணம் செய்த காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது. படப்பிடிப்பிற்காக 15 நாட்கள், தினமும் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டினேன்" என நடிகர் வருண் தவான் தெரிவித்துள்ளார்.



    'வருண் சைக்கிள் ஓட்டும் காட்சிகளில் அவருடன் முன்பக்கம் நான் அமர்ந்திருக்கும் காட்சிகள் இருக்கும். வெகு நேரம் படப்பிடிப்பிற்காக அமர்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் எனக்கு இந்த அனுபவம் பிடித்திருந்தது" என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

    'யாஷ் ராஜ் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள ‘சுய் தாகா - மேட் இன் இந்தியா’ என்ற இந்த படம் இந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் 28 ஆம் காந்தி ஜெயந்திக்கு முன்னதாகவே வெளியாக இருக்கிறது.
    பாலிவுட் நடிகர் வருண் தவான் தன் கையால் சட்டை தைத்து தன்னுடைய தந்தையின் பிறந்த நாளுக்கு சிறப்பு பரிசாக அளித்துள்ளார். #VarunDhawan #SuiDhaaga
    நடிகர் வருண் தவான் ‘சுய் தாகா’ படத்தில் பெற்ற அனுபவத்தையும், தையல் நுட்பத்தையும் வைத்து ஒரு சட்டையை தைக்கிறார். அதனை அவருடைய அப்பாவின் 68 வது பிறந்தநாளுக்கு பரிசாக வழங்கினார்.

    இந்த படத்தில் வருண் தையல் வேலைபாடு செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனால் இந்த படத்தின் மூலம் கைத்தறி கலையையும், தையல் வேலைப்பாடு நுட்பங்களையும் சிறப்பாக கற்றுக்கொண்டார். இந்த நுட்பத்தை பயன்படுத்தி தன் தந்தை டேவிட் வருண் அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு சட்டையை தைக்க முடிவு செய்தார். பரிசளித்து தன் தந்தையை ஆச்சர்யத்தில் ஆழ்த்த முடுவு செய்தார்.

    ஒரு அருமையான வண்ணமுடைய கோடைகால துணியை தேர்வு செய்து தன் கைத்தறி கலையை பயன்படுத்தி நீண்ட நாளாக நேரம் எடுத்து சிறப்பாக ஒரு சட்டையை தைத்து முடித்தார்.

    இதனை தன் தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்தார். இதை கண்ட டேவிட் மிகவும் பிரமாதமாக இருக்கிறது என மகிழ்ச்சியடைந்தார். தன் மகன் இப்படி தானாகவே அருமையான சட்டையை தைப்பார் என நினைக்கவில்லை எனவும் ஆச்சர்யத்துடன் தெரிவித்துள்ளார்.

    வருண் தவானும், அவரது அண்ணன் ரோஹித் என்பவரும் அவர்களது தந்தையின் பிறந்தநாளை மும்பையில் உள்ள ஹோட்டலில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர். மேலும் சிறப்பான இரவு உணவும் ஏற்பாடு செய்தனர்.
    ×