search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுயஉதவி குழு"

    • தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 4755 சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகிறது.
    • கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 81 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 4914 சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 4755 சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகிறது.

    2021-22-ஆம் ஆண்டில் 5600 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.448.00 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 10226 மகளிர் திட்டம் சார்ந்த மற்றும் பிற சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி நேரடி கடனாக ரூ.508.47 கோடி வங்கி நேரடி கடன் வழங்கப்பட்டது. மேலும் 2022-23 ஆம் ஆண்டில் 8594 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.550.00 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 2139 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.118.00 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 81 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இக்கூட்டமைப்புகளில் 8 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 2021-22-ம் ஆண்டில் வங்கி பெருங்கடனாக ரூ.3.42 கோடி பெருங்கடன் வழங்கப்பட்டுள்ளது. 2022-23-ஆம் ஆண்டிற்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.9.00 கோடி வங்கி பெருங்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அதில் 16 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.7.63 கோடி பெருங்கடன் வழங்க கேட்டு வங்கிகளில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. வங்கி கடன் தொகையை முறையாக செலுத்தும் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் தொகையில் ரூ.3 இலட்சத்திற்கான வட்டி மானியத்தில் 5% சுயஉதவிக் குழு கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    சிறப்பாக செயல்படும் சிறப்பு குழுக்களான மாற்றுத்திறனாளிகள். நலிவுற்றோர் மற்றும் முதியோர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி இணைப்பு கடன் பெறு வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வட்டாரங்களில் தர மதிப்பீட்டு முகாம் மற்றும் கடன் வழங்கும் முகாம்கள் நடத்தி சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் பெற்றுக் கொடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    • மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்படும்.
    • இதற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அம்பிகா, சுமதி, ரேவதி ஆகியோர் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய பகுதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு திட்ட இயக்குனர் காளிதாசன் தலைமை தாங்கினார். முன்னோடி வங்கி மேலாளர் அணில் முன்னிலை வகித்தார். உதவி திட்ட அலுவலர் வெள்ளப்பாண்டி வரவேற்றார். இதில் ஊமச்சிகுளம் இந்தியன் வங்கி கிளை மேலாளர், பொதும்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் 62 குழுக்களுக்கு ரூ.3.46 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. 23 குழுக்களுக்கு ரூ.1 கோடி மதிப்பில் தர மதிப்பீடு செய்யப்பட்டது. முடிவில் உதவி திட்ட அலுவலர் மரியா மகதேவ் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அம்பிகா, சுமதி, ரேவதி ஆகியோர் செய்திருந்தனர்.

    • வேளாண் துறை வருவாய் இணைந்து பயிர் சாகுபடி பரப்பினை சரியாக ஒத்திசைவு செய்திட கேட்டுக்கொண்டார்.
    • விக்ரமம் வி.ஏ.ஓ.விடம் சாகுபடி பரப்பு எவ்வாறு ஒத்திசைவு செய்யப்படுகிறது அடங்களில் சாகுபடி பரப்புகள் பிரதி மாதம் பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்பதை குறித்து பதிவேடுகளை நேரடியாக கேட்டறிந்தார்.

    மதுக்கூர்:

    தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அறிவுரைப்படி தஞ்சை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு துறைகளின் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் செயல்படுத்தும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதற்காக சிறப்பு அலுவலர் செபஸ்டின் பிரிட்டோராஜ் மதுக்கூர் வட்டாரங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    மதுக்கூர் வட்டார ஆய்வின்போது விக்ரமம் பஞ்சாயத்தில் சுயஉதவி குழு மகளிரிடம் கலந்துரையாடி அந்தந்த பஞ்சாயத்துகளில் உள்ள சுயதொழிளல் முன்னே ற்றங்களுக்கு தேவையான அடிப்படை ஆதாரத்துடன் முன்னேறுவது குறித்தும்அவர்க ளுடைய பொருளாதார நிலையை முன்னேற்ற தேவையான விஷய ங்கள் குறித்தும் கலந்துரை யாடினார்.

    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன் ராஜு மற்றும் செயற்பொறியாளர்கள் உடனிருந்தனர். பின் விக்ரமம் கிராம கிராம நிர்வாக அலுவலரிடம் சாகுபடி பரப்பு எவ்வாறு ஒத்திசைவு செய்யப்படுகிறது அடங்களில் சாகுபடி பரப்புகள் பிரதிமாதம் பதிவேற்றம் செய்யப்படு கின்றன என்பதை குறித்து பதிவேடுகளை நேரடியாக ஆய்வு செய்து கேட்டறிந்தார்.

    வேளாண் துறை வருவாய் இணைந்து பயிர் சாகுபடி பரப்பினை சரியாக ஒத்திசைவு செய்திட கேட்டுக்கொண்டார் பின் வாடியகாடு கிராமத்தில் அங்காடியை ஆய்வு செய்ததுடன் வாடிய காடு துவக்கப்பள்ளியில் உள்ள கழிவறைகளில் தூய்மை மற்றும் நீர் இருப்பு பற்றியும் ஆய்வு மேற்கொண்டார். பின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்களுடன் ஒவ்வொரு வட்டாரத்திலும் பஞ்சாயத்து வாரியாக நீர் வழித்தடங்கள் இதுவரை தூர்வாரி முடித்தது மற்றும் தூர்வார வேண்டிய விபரங்களை பஞ்சாயத்து வாரியான வரை படங்க ளாக தயாரித்தால் சிறப்பாக இருக்கும் என அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போதுமாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை கோமதி தங்கம் மற்றும் வேளாண் துணை இயக்கு னர் ஈஸ்வர் மற்றும் சிறப்பு அதிகாரியின் தொடர்பு அலுவலர் திரு ஐயம்பெருமாள் ஆகியோர் உடன் இருந்த னர். வேளாண் துறை ஆய்வுக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர்கள்ஜெரால்டு முருகேசு தினேஷ் ஆகி யோர் செய்திருந்தனர்.வேளாண்மை உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி ஆகியோர் திட்ட செயல்பாடுகள் பற்றி விளக்கிக் கூறினார்.

    ×