search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீருடை"

    • தமிழ் தான் திராவிடத்தை ஆளவும் வைக்கிறது, தமிழர்களை வாழவும் வைக்கிறது.
    • மாணவர்களுக்கு சீருடை, புத்தகப்பை தாமதமின்றி வழங்க நடவடிக்கை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் செல்லப்பன்பேட்டை கிராமத்தில் கால்நடை சிறப்பு முகாம் நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன்,டி.கே.ஜி நீலமேகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

    பின்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி, தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் தாய்மொழியாம் தமிழ் தான். தமிழ் தான் திராவிடத்தை ஆளவும் வைக்கிறது, தமிழர்களை வாழவும் வைக்கிறது. வரும் நவம்பர் முதல் வாரத்திற்குள்ளாக சீருடை உள்ளிட்ட பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும். டிசம்பர் மாத இறுதிக்குள்ளாக புத்தகப்பை வழங்குவதற்கான பணிகளை தொடங்கி ஜனவரி மாதத்திற்குள்ளாக வழங்கி விடுவோம். அடுத்த கல்வி ஆண்டில் ஜூன் மாதம் பள்ளிகள் திறந்து 2 வாரத்திற்குள்ளாக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சீருடை, புத்தகப்பை ஆகியவை தாமதம் இல்லாமல் வழங்கப்பட்டு விடும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர்உஷா புண்ணியமூர்த்தி, பூதலூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்லக்கண்ணு, கால்நடைபராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வம், தஞ்சாவூர் வருவாய்கோட்டாட்சியர் ரஞ்சித், உதவி இயக்குனர்சையத் அலி, பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கை கழுவும் திரவம், சீருடைகள் வழங்கல் நிகழ்ச்சி நடந்தது.
    • கிளப் தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப்பள்ளியில் ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் சார்பில் கை கழுவுவதில் ஏற்படும் நோய்த்தடுப்பு முறையை மாணவ-மாணவிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் கை கழுவும் திரவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கிளப் தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். செயலர் முருகேசன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் வரவேற்றார். பட்டய தலைவர் ஷேக் மஸ்தான் ராஜா முன்னாள் தலைவர்கள், கண்ணன், சிவராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நலிவடைந்த மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. ஆசிரியை சுபஸ்ரீ நன்றி கூறினார்.

    • பள்ளி மாணவர்களுக்கு சீருடை, பேனா வழங்கப்பட்டது.
    • ரோட்டரி சங்க பட்டய தலைவர் அலாவுதீன், ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல் கபீர், செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாணவிகள் 32 பேருக்கு சீருடையும், மாணவ, மாணவிகள் 500 பேருக்கு பேனா வழங்கும் நிகழ்ச்சியும் தாளாளர் அப்துல் மத்தீன் தலைமையில் நடந்தது.

    ரோட்டரி சங்க பட்டய தலைவர் அலாவுதீன், ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல் கபீர், செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

    தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் வரவேற்றார். பள்ளி நிர்வாகிகள் ரமீஸ், அஜ்ஹர், ஆசிரியர்கள், ரோட்டரி உறுப்பினர்கள் பொருளாளர் சிவகார்த்திக், மருத்துவர் செய்யது ராசிக்தீன், தர்மராஜ், சுந்தரம், சபிர், செய்யது மிதாஹிதின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விபத்து ஒன்றில் இவரது வலது காலில் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் ஆட்டோ ஓட்ட முடியாமல் போனது.
    • பல்வேறு இடங்களில் தனக்கு வேலை வாய்ப்பு வேண்டி சென்றும் வேலை கிடைக்கவில்லை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் சிக்கல் அருகே மஞ்சகொள்ளை பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ். ஆட்டோ டிரைவர். இவருக்கு சுபா என்ற மனைவியும் 4 பிள்ளைகளும் உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த விபத்து ஒன்றில் இவரது வலது காலில் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் ஆட்டோ ஓட்ட முடியாமல் போனது. இவர் பல்வேறு இடங்களில் தனக்கு வேலை வாய்ப்பு வேண்டி சென்றுள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

    மேலும் தனக்கோ அல்லது மனைவிக்கோ அரசு வேலை வழங்க கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளார். பிள்ளைகளுக்கு சீருடை மற்றும் தினம்தோறும் உணவுக்கு வழியில்லாமல் வாழ்ந்து வருவதாகவும், அரசோ அல்லது தனியார் நிறுவனங்களோ தனக்கு வேலை வாய்ப்பு வழங்கி உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    • பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவிகள் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்தின் வடிவில் அமர்ந்தும் நின்றும் கொண்டாடினர்.
    • மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் இயங்கி வரும் குருஞானசம்பந்தர் மிஷன் வி.தி.பி. நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு உதயமான தினம் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவிகள் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்தின் வடிவில் அமர்ந்தும் நின்றும் கொண்டாடினர். தருமபுரம் ஆதீனம் 27- வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாசியுடன் நடைபெற்ற விழாவிற்கு பள்ளியின் செயலர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். தலைமைஆசிரியர் தனராஜ் முன்னிலை வகித்தார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும், சீருடையும் வழங்கப்பட்டது.
    • உதவி ஆளுநர் ஜெயக்குமார் புதிய உறுப்பினர்களை இணைத்து வைத்தார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி பூக்கொல்லை ரோட்டில் அமைந்துள்ள மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை வளாகத்தில் மன்னை மிட்டவுன் ரோட்டரி 13-வது ஆண்டு பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

    அதில் புதிய தலைவராக டி.ரெங்கைய்யன், செயலராக வி.கோபால–கிருஷ்ணன், பொருளாளராக டி.அன்பழகன் பதவி ஏற்றுக்கொண்டனர். சங்க இயக்குனர்களாக விக்டர் வீ.பாலகிருஷ்ணன், ஆர்.பாலமுருகன், எம்.நடராஜன், கே.திருநாவுக்கரசு, ஏ.கே.பாலகுணசேகரன்,ஜீ.சிவ க்கொழுந்து, ஜீ.மனோ கரன், என்.சாந்த–குமார், கே.மோகனசுந்தரம், பி.ரமேஷ், ஆர்.மாரியப்பன், சி.குருசாமி, டாக்டர்.என்.விஜயகுமார் ஆகியோர் பதவியேற்றனர்.

    இதில் முன்மைவிருந்தி னராக மாவட்ட ஆளுநர் (23-24) மேஜர் டோனார் ஜீ.செங்குட்டுவன் சிறப்புரையாற்றினார். உதவி ஆளுநர் டி.ஜெயக்குமார் புதிய உறுப்பினர்களை இணைத்து வைத்தார். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும், சீருடையும் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். டி.ரெங்கையன் தலைமை தாங்கி பேசினர். சீ.குருசாமி வரவேற்றார். முடிவில் வீ.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார். புதிய உறுப்பினர்களாக மதிவாணன், கனகராஜ், சுந்தர்ராசு, அருள்செல்வன், முருகானந்தம் ஆகியோர் மிட்டவுன் ரோட்டரியில் உறுப்பினராக இணை ந்தனர்.

    • ராஜபாளையம் சேக்கிழார் மன்ற அறக்கட்டளையின் சார்பில் சொற்பொழிவுக் கூட்டம் மறக்கண்ணுச் செட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
    • மன்றத்தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சேக்கிழார் மன்ற அறக்கட்டளையின் சார்பில் சொற்பொழிவுக் கூட்டம் மறக்கண்ணுச் செட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மன்றத்தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் கல்யாணவெங்கட்ராமன் வரவேற்றார். சுதா, தீபா ஆகியோர் தேவார பண்ணிசை பாடல் பாடினர்.

    நெல்லை சிவ காந்தி "திருமுறைத்தமிழ்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட சிவனடியார் திருக்கூட்டத் தலைவர் சிவசங்கர் வாழ்த்துரை வழங்கினார். ஏழை-எளிய மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன. சிவனடியார்கள், இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    மன்றத்தின் துணைத்தலைவர் சங்கரலிங்கம் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை இணைச்செயலர்கள் முத்தையா, கணேசன் உட்பட மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • மாதானம் பகுதியில் ஆய்வு செய்த பொழுது செங்கல் சூளையில் 13 வயதுடைய சுபஸ்ரீ என்ற மாணவி பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாக கூறினர்.
    • பள்ளியில் 8-ஆம் வகுப்பு சேர்க்கப்பட்டு புத்தகம்,சீருடை மற்றும் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றி யத்தில் வட்டார வளமை யத்தின் சார்பாக பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்று திறன் படைத்த மாணவர்களை கண்டறியும் பணி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா உத்தரவின் படி நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி ஆசிரியர் பயிற்றுநர் ஐசக்ஞானராஜ் ஆகியோர் மாதானம் பகுதியில் ஆய்வு செய்த பொழுது செங்கல் சூலையில் 13 வயதுடைய சுபஸ்ரீ பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாகவும் கூறினார். காலை மாதானம் செங்கல் சூளைக்கு சென்ற பொழுது மாணவி சுபஸ்ரீ பள்ளிக்கு செல்லாமல் இருப்பது தெரிய வந்தது பெற்றோர்களிடம் விசாரி த்த பொழுது கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியம் கல்பூண்டியில் 4 ஆம் வகுப்பு படித்தாகவும் தாரபுரம் கடலூர் கேரளா போன்ற இடங்களுக்கு. சென்று கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டதால் படிக்க வைக்க முடிய வில்லை என்று பெற்றோர்கள் கூறினார்கள்.

    பெற்றோர்களுடன் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும் மாவட்டஉதவி. திட்ட அலுவலர் ஞானசே கரன் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் திருசங்கு மற்றும் ஜெய்கிருஷ்ணன் ஆலோசனையின் படி மாணவி அருகில் உள்ள சிவானந்த உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு சேர்க்க ப்பட்டு புத்தகம்மற்றும் சிருடை மற்றும் விலையி ல்லா பொருட்கள வழங்க ப்பட்டது. அப்பொழுது பள்ளியின் தலைமை ஆசிரியர் பவானி ஆசிரி யர்கள் மணிமாறன் மற்றும் சேகர் ஆகியோர் இருந்தனர்.

    ×