search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீன தைபே"

    சீன தைபே பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து காலிறுதியோடு வெளியேறினார். #AjayJayaram
    சீன தைபே பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் இந்திய வீரர் அஜய் ஜெயராம், மலேசியாவின் லீக் ஜீ ஜியா-வை எதிர்கொண்டார். இதில் அஜய் ஜெயராம் 16-21, 9-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

    முதல் சுற்றில் 16 புள்ளிகள் வரை அஜய் ஜெயராம் கடும் நெருக்கடி கொடுத்தார். அதன்பின் 16-21 என முதல் செட்டை இழந்தார். ஆனால் 2-வது செட்டில் பெரிய அளவில் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 9-21 என 2-வது செட்டை இழந்தார்.

    மற்றொரு வீரரான சவுரப் வர்மா ஏற்கனவே தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
    நியூசிலாந்து உடனான இண்டர்காண்டினெண்டல் கோப்பை கால்பந்து போட்டியில் கென்யா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. #KENvNZL #IntercontinentalCup

    மும்பை:

    இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை மும்பையில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் தென்னாபிரிக்கா கலந்துகொள்வதாக இருந்தது. இருப்பினும் அந்த அணி கலந்துகொள்ள முடியாத காரணத்தினால் கென்யா அணி சேர்க்கப்பட்டது.

    நேற்று நடைபெற்ற அறிமுக ஆட்டத்தில் சுனில் செத்ரியின் ஹாட்ரிக் கோலினால் இந்தியா, 5-0 என சீன தைபே அணியை வீழ்த்தியது. இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கென்யா - நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியின் 42-வது நிமிடத்தில் நியூசிலாந்து அணியின் சர்பிரீத் சிங் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 45-வது நிமிடத்தில் கென்யா அணியின் கிளிப்டன் மிஹெசோ அயிசி கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டம் 1-1 என சமனானது.



    இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் கென்யா அணியின் மைக்கெல் ஒவெல்லா ஒரு கோல் அடித்தார். நியூசிலாந்து அணியினர் இறுதி வரை முயன்றும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இதனால் கென்யா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் கென்யா - இந்தியா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #KENvNZL #IntercontinentalCup
    சீன தைபே உடனான இண்டர்காண்டினெண்டல் கோப்பை கால்பந்து போட்டியில் சுனில் செத்ரியின் ஹாட்ரிக் கோலால் இந்திய அணி 5-0 என அபாரமாக வெற்றி பெற்றது. #BackTheBlue #INDvTPE #IntercontinentalCup

    புதுடெல்லி:

    இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை மும்பையில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் தென்னாபிரிக்கா கலந்துகொள்வதாக இருந்தது. இருப்பினும் அந்த அணி கலந்துகொள்ள முடியாத காரணத்தினால் கென்யா அணி சேர்க்கப்பட்டது.

    நேற்று நடைபெற்ற அறிமுக ஆட்டத்தில் இந்தியா - சீன தைபே அணிகள் மோதின. போட்டி தொடங்கிய 14-வது நிமிடத்தில் இந்திய அணியின் சுனில் செத்ரி கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 34-வது நிமிடத்தில் செத்ரி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் இந்திய அணியின் உதாந்தா சிங் ஒரு கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 62-வது நிமிடத்தில் சுனில் செத்ரி தனது மூன்றாவது கோல் அடித்தார். இது அவரது ஹாட்ரிக் கோல் ஆகும். 78-வது நிமிடத்தில் புரொனாய் ஹேல்டர் கோல் அடித்தார்.



    சீன தைபே அணியினர் இறுதி வரை முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடைபெறும் போட்டியில் கென்யா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #BackTheBlue #INDvTPE #IntercontinentalCup
    ×