search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சில்க் சுமிதா"

    • குறுகிய காலத்திலேயே பெயரும், பணமும், புகழும் சம்பாதித்தவர் சில்க் சுமிதா.
    • நல்லநிலையில் இருந்தும் சில்க் சுமிதா தற்கொலை செய்து கொண்டது வருத்தமான விஷயம்.

    பிரபல கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா 1996-ம் ஆண்டு தனது 35-வது வயதில் தூக்கில் தொங்கி இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், சாவில் மர்மம் இருப்பதாகவும் இரு விவாதங்கள் நடந்தன. சில்க் சுமிதா வாழ்க்கை சினிமா படமாகவும் வந்தது.

    இந்த நிலையில் சில்க் சுமிதா மரணம் குறித்து கவர்ச்சி நடிகை ஜெயமாலினி தற்போது அளித்துள்ள பேட்டியில், "குறுகிய காலத்திலேயே பெயரும், பணமும், புகழும் சம்பாதித்தவர் சில்க் சுமிதா. படப்பிடிப்பு அரங்கில் எங்களுடன் அவர் பேச மாட்டார்.

    ஒரு படத்தில் ஹீரோவை சுற்றி வரும் நடிகைகளாக நான் மற்றும் எனது சகோதரி ஜோதி லட்சுமி, சில்க் சுமிதா ஆகிய மூன்று பேரும் நடித்து இருக்கிறோம். நல்லநிலையில் இருந்தும் சில்க் சுமிதா தற்கொலை செய்து கொண்டது வருத்தமான விஷயம். 

    ஆனால் சில்க் சுமிதா வாழ்க்கையில் செய்த பெரிய தவறை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். காதலிக்கலாம்... தவறில்லை. ஆனால் பெற்றோரை ஒதுக்கி வைக்கக்கூடாது. அவர் தனது தாயாரையும், சகோதரனையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஒருவரை மட்டும் நம்பி வாழ்ந்தார்.

    உறவினர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டால் பாதி அவர்கள் தின்றாலும் கொஞ்சமாவது நமக்காக வைப்பார்கள். ஆனால் ரத்த சம்பந்தம் இல்லாதவர்களை வைத்துக்கொண்டால் அதுவும் நமக்கு உறவினர்கள் ஆதரவு இல்லை என்று அவர்களுக்கு தெரிந்தால் ஏமாற்றுவார்கள். அப்படித்தான் சில்க் சுமிதாவும் பலியாகிவிட்டார்'' என்றார்.

    • போலி கணக்கில் இருந்து மெசேஜ் வந்தால் அந்த தளத்தை பிளாக் செய்துவிடுங்கள்.
    • இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன் தமிழில் அஜித்குமார் ஜோடியாக ‘நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்திருந்தார்.

    சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பெயரில் அவ்வப்போது போலி கணக்கு தொடங்கப்படுவதும், பின்னர் அது சர்ச்சையாகி வருவதும் நடந்துள்ளது. அந்தவகையில் பாலிவுட் நடிகை வித்யாபாலன், இதுபோன்ற பிரச்சனையில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வித்யாபாலன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'எனது பெயரில் மர்ம நபர் ஒருவர் 'வாட்ஸ்-அப்' மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். 'வாட்ஸ்-அப்'பில் எனது புகைப்படத்தை வைத்துக் கொண்டு, நான் தான் வித்யாபாலன் எனச் சொல்லி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது இப்போதுதான் எனக்கு தெரிய வந்துள்ளது. எனவே அதுபோன்ற நபர்களிடம் இருந்து அழைப்பு அல்லது மெசேஜ் வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம்', என்று கூறியுள்ளார்.

    மேலும், 'இதுகுறித்து தனது குழுவினர் புகார் அளித்துள்ளனர். இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்க வேண்டாம். அப்படி அந்த போலி கணக்கில் இருந்து மெசேஜ் வந்தால் அந்த தளத்தை பிளாக் செய்துவிடுங்கள்' என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன் தமிழில் அஜித்குமார் ஜோடியாக 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்திருந்தார். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையான 'தி டர்ட்டி பிக்சர்' படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார்.

    • 1980 மற்றும் 90-களில் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் சுமிதா.
    • நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை 'த டர்ட்டி பிக்சர்' என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி வெளியானது.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 1980 மற்றும் 90-களில் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் சுமிதா. இவரது கால்ஷீட்டுகாக தயாரிப்பாளர்கள் காத்து கிடந்த காலம் இருந்தது. சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே 1996-ல் தற்கொலை செய்து கொண்டு பட உலகை அதிர வைத்தார்.

     

    சில்க் சுமிதா

    சில்க் சுமிதா

    சில்க் சுமிதாவின் வாழ்க்கை 2011-ல் மிலன் இயக்கத்தில் இந்தியில் 'த டர்ட்டி பிக்சர்' என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி வெளியானது. இதில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்த வித்யாபாலன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். தற்போது சில்க் சுமிதா வாழ்க்கை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது.

     

    சில்க் சுமிதா - டாப்சி

    சில்க் சுமிதா - டாப்சி

    முதல் பாகத்தை எடுத்த பிரபல இந்தி பட அதிபர் ஏக்தா கபூர் 2-ம் பாகத்தையும் தயாரிக்கிறார். 2-ம் பாகத்தில் சில்க் சுமிதாவின் இளம் வயது வாழ்க்கை சம்பவங்கள் இடம்பெறுவதால் வித்யாபாலன் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    டாப்சி

    டாப்சி

     

    எனவே சில்க் சுமிதா வேடத்துக்கு கங்கனா ரணாவத்தை அணுகியுள்ளனர். அவர் நடிக்க மறுத்துவிட்டதால் டாப்சி, கீர்த்தி சனோன் ஆகியோரிடம் படக்குழுவினர் பேசி வருவதாகவும், டாப்சி நடிக்க அதிகபடியான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ×